அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேளாண் சட்ட தீர்மானம் காங்., அழகிரி வரவேற்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நாகர்கோவில்:''மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாடு முழுதும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், அவர் நேற்று கூறியதாவது:மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை

நாகர்கோவில்:''மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நாடு முழுதும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்,'' என, தமிழக காங்., தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில், அவர் நேற்று கூறியதாவது:மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிகவும் பாராட்டுகிறேன்.

விவசாயிகள் இவ்வளவு காலமும் தொடர் போராட்டத்தை மழையிலும், வெயிலிலும் நடத்திக் கொண்டிருந்தனர். விவசாயிகளின் கஷ்டங்களை தெரிந்த முதல்வர் ஸ்டாலின், இந்த தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறார்.தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுதும் உள்ள விவசாயிகளிடமும், இது விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த தீர்மானத்தை எதிர்த்து அ.தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது. இந்த தீர்மானத்தை, அ.தி.மு.க ஆதரித்திருக்க வேண்டும்.இலங்கை தமிழர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிதி உதவி வழங்கியிருப்பதை பாராட்டுகிறேன். கருணாநிதி செய்ததை விட ஒருபடி மேலே செய்திருக்கிறார்.இவ்வாறு அழகிரிகூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X