பொது செய்தி

இந்தியா

மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி (டி.ஏ.,) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.இதற்கு முன் 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது
CENTRAL, GOVT, STAFF, DA, INCREASE, மத்திய அரசு, ஊழியர்களுக்கு, அகவிலைப்படி, உயர்வு

புதுடில்லி: மத்திய அரசு பணியாளர்களுக்கு மேலும் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட உள்ளது. ஏற்கனவே, 28 சதவீதம் அகவிலைப்படி (டி.ஏ.,) அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அதாவது 31 சதவீதம் அகவிலைப்படி அளிக்கப்படும் என தெரிகிறது.

இதற்கு முன் 17 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வந்தது. அது 28 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஜூலை 2021 முதல் இது நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும் கூடுதலாக 3 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசு பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் அனைவருக்கும் பொருந்தும்.


latest tamil news


கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அப்போது 4 சதவீதம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் மாதம் 3 சதவீதம் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் 17 சதவீத அகவிலைப்படி அறிவிக்கப்பட்டது. அத்துடன் 11 சதவீதம் கூடுதலாக சேர்க்கப்பட்டு 28 சதவீதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஜூன் மாதம் முதல் 3 சதவீதம் கூடுதலாக வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் மத்திய அரசு பணியாளர்கள், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.Gomathinayagam - chennai,இந்தியா
29-ஆக-202114:31:45 IST Report Abuse
A.Gomathinayagam விலை வாசி உயர்வதால் அதை ஈடுகட்ட ,அக விலை படி கொடுப்பது நியாயமே ,விலை வாசியை கட்டுப்படுத்தவேண்டிய ஒன்றிய அரசு .பெட்ரோல் .டீசல் .சமயல் எரிவாயு .போன்றவற்றை தொடர்ந்து உயர்த்துவிட்டாலே இந்த நிலை .
Rate this:
29-ஆக-202118:01:39 IST Report Abuse
Vittal anand rao.உன் நியாயத்தை உடைப்பில் போடு. மானோல அரசு கருணாநிதியின் புகழ் பாட செலவழிக்கும் காசில் ஒரு தொகை தன் ஊழியர்களுக்கு பஞ்ஜபடிக்கு செலவிடவில்லை.மவ் கோரோனா செலவு அவக்கும் உண்டு....
Rate this:
Cancel
29-ஆக-202113:56:22 IST Report Abuse
அப்புசாமி பாவம் ஏழைங்க. ஒரு 50 சதவீதமா ஏத்திக் குடுங்க. ரொம்ப கஷ்டப் படுறாங்க. உ.பி தேர்தல் வேற வருது.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
29-ஆக-202113:43:03 IST Report Abuse
Pugazh V மத்திய அரசுப் பணிக்கு முயன்று கிடைக்காதவர்கள் வந்து வயத்தெரிச்சலைக் கொட்டவும். அரசுப் பணியாளர்கள் ஒரு வேலையும் செய்ழதில்லை. தண்ட சம்பளம் என்று எழுதுங்கள். ரயில்கள் எல்லாம் தானே ஓடுகின்றன. ரயில் டிக்கெட் எல்லாம் தானே விற்பனை ஆகின்றன. தேசிய நெடுஞ்சாலை கள் தானே போட்டு கொள்கின்றன. ஜிஎஸ்டி கணக்கு கள் தாமே சரிபார்த்து கொள்கின்றன. பிரதமர் ஆபீஸ் முதல் எல்லா ம. அரசு ஆபீசிலும் வேலைகள் ஏதோ ரோபோக்கள் செய்கின்றன. ம. அரசு பணியாளர்கள் ஒரு வேலையும் செய்வதில்லை என்று எழுதுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X