பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள்: கோவை கலெக்டர் தகவல்

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோவை:''கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் தொற்று அதிகரிப்பு தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என, கோவை கலெக்டர் சமீரன் கூறினார்.தமிழக - கேரளா எல்லை வாளையாரில் நேற்று ஆய்வு செய்த, கோவை கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:கேரளாவில் இருந்து வருவோர், உரிய சான்று இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பணி நிமித்தம் காரணமாக தினமும்

கோவை:''கோவை மாவட்டத்தில் வரும் நாட்களில் தொற்று அதிகரிப்பு தொடர்ந்தால், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,'' என, கோவை கலெக்டர் சமீரன் கூறினார்.தமிழக - கேரளா எல்லை வாளையாரில் நேற்று ஆய்வு செய்த, கோவை கலெக்டர் சமீரன் நிருபர்களிடம் கூறியதாவது:கேரளாவில் இருந்து வருவோர், உரிய சான்று இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பணி நிமித்தம் காரணமாக தினமும் வருவோருக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் இன்று (நேற்று) முதல் இச்சோதனை சாவடியில் நடத்தப்படுகிறது.கேரள மாநிலம் பாலக்காடு, மலப்புரம் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இதில், இங்கு கோவையில் பயிலும், கேரள மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தடுப்பூசி செலுத்த முடிவு எடுக்கப்பட்டது. ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டவர்களுக்கு, அவர்கள் பயிலும் கல்லுாரியிலேயே இரண்டாவது முறை தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்படும். கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக, 1.8 சதவீதத்திலிருந்த தொற்று பாதிப்பு இரண்டு சதவீதமாக அதிகரித்துள்ளது. தொற்று அதிகரித்தால் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும். கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை, 38 லட்சம். இதில், 18 வயதுக்கு மேற்பட்டோர், 27.5 லட்சம் பேர். ஒருமுறை மட்டும் தடுப்பூசி போட்டவர்கள், 22 லட்சம் பேர். இரண்டாவது தவணை தடுப்பூசி போடுவோர் எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, கலெக்டர் சமீரன் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Coimbatore,இந்தியா
30-ஆக-202107:51:55 IST Report Abuse
CBE CTZN கலெக்டர் ஐயா சமீரன் அவர்களே, தினமும் பத்துக்கும் மேற்பட்ட ரயில்களில் பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கேரளாவில் இருந்து மட்டும் வருகிறார்கள் என்பது உங்களுக்கு தெரியவில்லையா. இவர்கள் எந்தவிதமான பரிசோதனைக்கும் உட்படுத்தாமல், தனிமைப்படுத்துதலும் இல்லாமல் சர்வசுதந்திரமாக கோவையில் அனுமதிப்பது யார். அவர் செய்யும் தவறுக்கு, அப்பாவி மக்கள் எதற்காக, கஷ்டப்படவேண்டும். கோவையிலேயே தங்கி வாழ்ந்துவரும் மக்கள், பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்தும் அவர்களை கஷ்டப்படுத்துவரது நியாயம் இல்லை
Rate this:
Cancel
29-ஆக-202115:23:39 IST Report Abuse
Ram Pollachi எங்க படிக்கிறார்கள் ஜோடி போட்டுகிட்டு ஊர் சுற்ற இங்கே வருகிறார்கள் இது தெரியாமல் ஊசி போட முன்னுரிமை தருவது ஏமாற்றும் வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X