88 ஆண்டை கடந்தும் மேட்டூர் அணையின் கம்பீரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

88 ஆண்டை கடந்தும் மேட்டூர் அணையின் கம்பீரம்

Added : ஆக 29, 2021
Share
மேட்டூர்:மேட்டூர் அணை கட்டப்பபட்டு 88 வது ஆண்டில் அடியெடுத்து வைத்தும் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.தமிழகத்திலேயே மிகப்பெரிய அணை சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நீரை பாசனத்துக்கு பயன்படுத்த, அப்போதைய ஆங்கிலேய அரசு, காவிரி குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது.அதற்கான ஆய்வு பணி, 1905 முதல், 1910 வரை நடந்தது. 1924 மார்ச், 31ல்
 88 ஆண்டை கடந்தும்  மேட்டூர் அணையின் கம்பீரம்

மேட்டூர்:மேட்டூர் அணை கட்டப்பபட்டு 88 வது ஆண்டில் அடியெடுத்து வைத்தும் இன்னும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.தமிழகத்திலேயே மிகப்பெரிய அணை சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை. வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க, நீரை பாசனத்துக்கு பயன்படுத்த, அப்போதைய ஆங்கிலேய அரசு, காவிரி குறுக்கே அணை கட்ட முடிவு செய்தது.அதற்கான ஆய்வு பணி, 1905 முதல், 1910 வரை நடந்தது. 1924 மார்ச், 31ல் இந்திய அரசின் ஒப்புதலுக்கு அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை அனுப்பப்பட்டது. அதே ஆண்டு டிச., 11ல் அணை கட்டுவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது. 1925 ஜூலை, 20ல் அடிக்கல் நாட்டப்பட்டது.தலைமை வடிவமைப்பு, கண்காணிப்பு பொறியாளர் எல்லீஸ், நிர்வாக பொறியாளர் வெங்கட்ராம ஐயர், முதன்மை தலைமை பொறியாளர் முல்லீங் தலைமையில், 24 பேர் அடங்கிய பொறியாளர் குழு கட்டுமானப்பணியில் ஈடுபட்டது.தினமும், 840 டன் சுண்ணாம்பு கலவை, 1,800 லாரிகள் கட்டுமானப்பணிக்கு பயன்படுத்தப்பட்டன. மின்சாரம், கர்நாடகா மாநிலம், சிவசமுத்திரா மின் நிலையத்தில் இருந்து பெறப்பட்டது. 4.80 கோடி ரூபாய் செலவில் அணை கட்டப்பட்டு, 1934 ஜூலை, 14ல் அணை உச்சியில் கட்டுமானத்துக்குரிய கடைசி கல் வைத்து பணி நிறைவு செய்யப்பட்டது.அதே ஆண்டு ஆக., 21ல், அப்போதைய சென்னை மாகான கவர்னர் ஜான் பிடரிக் ஸ்டேன்லி, பாசன நீரை திறந்து வைத்து, மேட்டூர் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.அவரது நினைவாக, ஸ்டேன்லி அணை என பெயர் சூட்டப்பட்டது.அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கொள்ளளவு, 93.47 டி.எம்.சி., அணை கட்டடம், 5,300 அடி நீளம். ஆசியாவில் ஒரே நேர் கோட்டில் கட்டப்பட்ட அணை எனும் பெருமை உண்டு.இதன்மூலம் தமிழகத்தில், 12 மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணை கட்டிய பின், 1947 மே, 5, 1999 அக்., 10, 2015 மே, 31 என, மூன்று முறை இடிதாக்கிய போதும் பாதிப்பு ஏற்படவில்லை.நடப்பாண்டு, 88ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மேட்டூர் அணை, சிறந்த கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாகவும், விவசாயிகளின் உயிர்நாடியாகவும் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X