பொது செய்தி

தமிழ்நாடு

சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 25 பேர் சுதந்திர தின சைக்கிள் பயணம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்;இந்தியாவின், 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டமாக, கோவை சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 25 பேர் பெங்களூருவுக்கு தொடர் சைக்கிள் பயணம் புறப்பட்டனர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று கோவை குருடம்பாளையம், சி.ஆர்.பி.எப்.,பை சேர்ந்த, 25 பேர் பெங்களூர் நோக்கி, தங்களது தொடர் சைக்கிள் பயணத்தை
 சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 25 பேர் சுதந்திர தின சைக்கிள் பயணம்

பெ.நா.பாளையம்;இந்தியாவின், 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டமாக, கோவை சி.ஆர்.பி.எப்., வீரர்கள், 25 பேர் பெங்களூருவுக்கு தொடர் சைக்கிள் பயணம் புறப்பட்டனர்.நாட்டின், 75வது சுதந்திர தினத்தையொட்டி, ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், கொண்டாட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று கோவை குருடம்பாளையம், சி.ஆர்.பி.எப்.,பை சேர்ந்த, 25 பேர் பெங்களூர் நோக்கி, தங்களது தொடர் சைக்கிள் பயணத்தை துவக்கினர். இவர்களை கோவை குருடம்பாளையம் சி.ஆர்.பி.எப்., மத்திய பயிற்சி கல்லுாரி முதல்வர் சதீஷ் சந்திர வர்மா கொடியசைத்து, அனுப்பி வைத்தார்.கோவை சி.ஆர்.பி.எப்., வீரர்கள், பெங்களூரு சென்று சேர்ந்தவுடன், இன்னொரு அணி, சி.ஆர்.பி.எப்., 25 வீரர்கள் அங்கிருந்து, ஹைதராபாத் நோக்கி சைக்கிள் பயணத்தை துவக்குவர்.கோவையில் நடந்த நிகழ்ச்சியில், சி.ஆர்.பி.எப்., சென்னை டி.ஐ.ஜி., தினகரன், கமாண்டன்ட் பிரவீன் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் சைக்கிள் பயணம், அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தியன்று டில்லி ராஜ்காட் சென்றடைகிறது. 2,850 கி.மீ., பயணம் 'ஆசாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' என்ற தலைப்பில், நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X