சிறைத்துறையினருக்கான தேசிய போட்டிகள்  ஜே ஜே!

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கோவை:சிறைத்துறையினருக்கான தேசிய அளவிலான போட்டிகளுக்கு, மாநில அணித் தேர்வு, கோவையில் நேற்று நடந்தது.அகில இந்திய அளவிலான சிறைத்துறை ஊழியர்களுக்கான, விளையாட்டு போட்டிகள், விரைவில் நடக்க உள்ளன. இதற்கான மாநில அளவிலான அணி தேர்வு, கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் நடந்த தேர்வுகளின் முடிவில், கோவையில் நேற்று இறுதித் தேர்வு நடந்தன.இறுதிப் போட்டிக்கு

கோவை:சிறைத்துறையினருக்கான தேசிய அளவிலான போட்டிகளுக்கு, மாநில அணித் தேர்வு, கோவையில் நேற்று நடந்தது.அகில இந்திய அளவிலான சிறைத்துறை ஊழியர்களுக்கான, விளையாட்டு போட்டிகள், விரைவில் நடக்க உள்ளன. இதற்கான மாநில அளவிலான அணி தேர்வு, கடந்த சில மாதங்களாக நடந்து வந்தது. பல்வேறு மாவட்டங்களில் நடந்த தேர்வுகளின் முடிவில், கோவையில் நேற்று இறுதித் தேர்வு நடந்தன.இறுதிப் போட்டிக்கு தேர்வான, இரு ஆடவர் வாலிபால் அணியில் இருந்து, ஒரு அணி தேர்வு செய்யப்பட்டது. இதே போல், பெண்கள் வாலிபால் அணியும் தேர்வு செய்யப்பட்டது.இதன் பின், சிறைத்துறை பிசினஸ் மாடல் போட்டிகளில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இறுதி போட்டிக்கு தகுதியான, ஆறு பேர் பங்கேற்றனர்.இவர்களில் இருந்து, மாநில அணிக்கு நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். கோவை மத்திய சிறை எஸ்.பி., செந்தாமரைக்கண்ணன், தேர்வுக்கு தலைமை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X