பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரை அடித்தாலும் சிறை கிடையாது: நடவடிக்கை எடுக்க தயங்கும் அதிகாரிகள்!

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், பொதுமக்களால் போலீசார் தாக்கப்பட்டாலும் கூட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது, 'போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மரணத்தை தவிர்க்க, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்களை ஸ்டேஷனில் வைத்திருக்க வேண்டாம்' என, உயர் அதிகாரிகள் வாய்மொழியாக
போலீஸ், சிறை, நடவடிக்கை, அதிகாரிகள்

சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், பொதுமக்களால் போலீசார் தாக்கப்பட்டாலும் கூட உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போது, 'போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மரணத்தை தவிர்க்க, அடிதடி, மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் கைதானவர்களை ஸ்டேஷனில் வைத்திருக்க வேண்டாம்' என, உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர்.

ஏனெனில், ஒருவரை மதியத்திற்கு பின் கைது செய்யும்பட்சத்தில் உடனடியாக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்று 'ரிமாண்ட்' செய்வதில் நடைமுறை சிக்கல் உள்ளது. இதனால் ஸ்டேஷனில் இரவு தங்க வைத்து மறுநாள் நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்வர். தற்போது சட்டசபை கூட்டத்தொடர் காரணமாக ஸ்டேஷனில் கைதிகளை தங்க வைப்பதை தவிர்க்க அவர்களை சொந்த ஜாமினில் போலீசார் விடுவித்து வருகின்றனர்.


வழக்குப்பதிவு


போலீஸ்காரரை தாக்கியவர்களுக்குக்கூட இந்த சலுகையை அவர்கள் அளித்து வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன் மதுரை திருப்பாலை ஸ்டேஷன் எஸ்.ஐ., ஒருவர், கல்லுாரி மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டார். வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாணவரை விடுவித்தனர்.


latest tamil news


அதேபோல், சேலம் கொண்டலாம்பட்டி போலீஸ்காரர் ஒருவரை, முதியவர் ஒருவர் போதையில் நிர்வாணமாக தாக்கினார். மக்களே கடுப்பாகி அவரை கண்டிக்க, போலீஸ்காரர் எதுவும் நடக்காது போல் அமைதியாக இருந்தார்.பின் போலீசார் முதியவரை அழைத்துச்சென்று வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர். இதனால் ஆத்திரமுற்ற போலீஸ்காரர், 'இனி சோற்றில் உப்பு போட்டு சாப்பிட மாட்டேன்' என சபதம் போட்டுள்ளார்.

தொடர்ந்து போலீசார் தாக்கப்படுவதும், தாக்கியவர்கள் விடுவிக்கப்படுவதும் சக போலீசாரை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு மென்மையான போக்கையே கடைபிடிக்குமாறு எங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.


நடவடிக்கை


பொது இடங்களில் நாங்கள் கண்டித்து அடித்தால் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புகின்றனர். உடனே அதிகாரிகள் விசாரிக்காமல் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இதனாலேயே, 'அடி கொடுத்தால் வாங்கிக்கொள்வோம்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம். இதேநிலை நீடித்தால் போலீஸ் மீது மரியாதையும், கவுரவமும் குறையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோகன் - கென்ட்,யுனைடெட் கிங்டம்
29-ஆக-202118:24:56 IST Report Abuse
மோகன் போலீசார் தன்னை நேர்மையானவனாக திரித்திகொண்டால் பொதுமக்கள் சப்போட் தானாக கிடைக்கும். ஆனால் ஒரு சில நல்ல போலீசார் தவிர மற்ற அனைவரும் கேடு கெட்ட பிச்சைக்காரர்கள்.
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
29-ஆக-202117:11:10 IST Report Abuse
sridhar A few years ago, in Ambur a few hundred Muslims thrashed some fifty policemen and women . No action was taken against the offenders for political reasons.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
29-ஆக-202116:24:30 IST Report Abuse
Natarajan Ramanathan தீயமுக வந்தாலே இந்த அவலம் நடக்கும். இல்லையேல் சின்ன சுடலை டிஜிபியை மிரட்டிய வழக்கில் இந்நேரம் மாவுக்கட்டு போட்டு மரியாதை கிடைத்திருக்குமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X