தமிழ் டிஜிட்டல் உலகின் நம்பர் 1 இணையதளம் தினமலர் 23ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது| Dinamalar

தமிழ் டிஜிட்டல் உலகின் நம்பர் 1 இணையதளம் தினமலர் 23ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது

Updated : ஆக 30, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (74) | |
சென்னை: அன்பான வாசகர்களே, உங்களுடைய தொடர்ந்த ஆதரவுடன், உங்கள் தினமலர் இணைய தளம் 23ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.உலக தமிழர்களுடன் உள்ளூர் மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதில் தினமலர் இணையதளம் என்றுமே முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 122 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நமது இணையதளத்தின் வாசகர்களாக இருக்கின்றனர். தாய்நாட்டில்
Dinamalar, தினமலர், தினமலர்இணையதளம், Dinamalarwebsite, birthday, anniversary

சென்னை: அன்பான வாசகர்களே, உங்களுடைய தொடர்ந்த ஆதரவுடன், உங்கள் தினமலர் இணைய தளம் 23ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

உலக தமிழர்களுடன் உள்ளூர் மற்றும் உலக நடப்புகளை உடனுக்குடன் கொண்டு சேர்ப்பதில் தினமலர் இணையதளம் என்றுமே முன்னணியில் உள்ளது. உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 122 நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் நமது இணையதளத்தின் வாசகர்களாக இருக்கின்றனர். தாய்நாட்டில் நடப்பவற்றை, தங்கள் நாட்டில் இருந்து கொண்டே உள்ளங்கையில் அடங்கிய அலைபேசியில் பார்த்து, ஆனந்தம் அடைகின்றனர்.

உலக தமிழர்களின் இணைப்பு பாலமாக விளங்கி வரும் தினமலர் இணைய தளம் உடனுக்குடன் நம்பகமான செய்திகளை கொடுத்து வாசகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ளது.


நேரடி டி.வி., ஒளிபரப்புlatest tamil newsஆதாரப்பூர்வ செய்திகளை படங்களுடன் வெளியிடப்பட்டு வரும் உங்கள் தினமலர் தற்போது செய்தித் தொகுப்பை வீடியோவாக தந்து வருகிறது. பல நிகழ்வுகளை நேரடியாகவும் ஒளிபரப்பு செய்து வருகிறது. உங்கள் ஆதரவுடன் மேலும் பல முக்கிய சுவாரஸ்யமான பகுதிகளை வழங்க இருக்கிறோம்.

பொது செய்திகள் மட்டும் அல்லாது கல்விமலர், சினிமா மற்றும் விளையாட்டு, ஆன்மிகம் செய்திகளையும் விரிவாக தருவது தினமலர் இணையதளம் மட்டுமே. தமிழ் செய்தி இணையதளங்களில் நம்பர் 1 ஆக இருக்கும் தினமலர் இணையதளம் தொடர்ந்து தமிழர்களின் ஆர்வத்தையும், செய்தி வேட்கையையும் நிறைவேற்றுவதில் தனிப்பங்காற்றும். செய்தியில் தரம் மட்டுமல்லாமல், வார்த்தைகளில் நாகரீகத்தை கண்டிப்பாக கடைபிடிக்கிறது தினமலர் இணையதளம்.

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், யூடியூப் சமூக வலைதளங்களிலும் தினமலர் இணையதளம் தனது முத்திரையை பதித்து வருகிறது.
சமூக வலைதங்களில் பரவும் போலி செய்திகள், பொய்யான செய்திகள் போன்றவற்றை தவிர்த்து நம்பகத்தகுந்த செய்திகளை தருவது தினமலர் இணையதளம் மட்டுமே.


தினமலர் ஆப்

உலக நடப்புகளை உடனுக்குடன் அறிய ‛தினமலர் ஆப்' ஐ டவுன் லோடு செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் செய்ய


ஆண்ட்ராய்டு:

https://play.google.com/store/apps/details?id=com.softcraft.dinamalar


ஐபோன்

https://apps.apple.com/in/app/dinamalar/id438028462?ls=1


ஆப்பிள் வாட்ச்


https://apps.apple.com/in/app/dinamalar/id438028462#?platform=appleWatch


ஐபேப்பர்தினமலர் நாளிதழை அச்சில் வந்தபடி அப்படியே படிப்பதற்காக ஐபேப்பரையும் வழங்குகிறது தினமலர் இணையதளம். ஐபேப்பரை ‛ தினமலர் ஐபேப்பர் ஆப்' மூலமும் படிக்கலாம்.
டவுன்லோடு முகவரி


ஆண்ட்ராய்டு

https://play.google.com/store/apps/details?id=com.dinamalar.ipaper


ஐபோன்

https://apps.apple.com/in/app/dinamalar-ipaper-plus/id1474920995#?platform=iphone


ஐபேட்

https://apps.apple.com/in/app/dinamalar-ipaper-plus/id1474920995


தினமலர் காலண்டர் ஆப்பை டவுன்லோடு செய்ய
ஆண்ட்ராய்டு

https://play.google.com/store/apps/details?id=com.daily.dinamalarஐபோன்

https://apps.apple.com/in/app/dinamalar-calendar-2018/id1087267157

23ம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் இந்த தருணத்தில் அதேபோன்ற நம்பகத்தன்மை, தரம் ஆகியவற்றை தாரகமந்திரமாக ஏற்று தொடர்ந்து செய்திகளை வழங்குவோம் என வாசகர்களுக்கு தெரிவிக்கிறோம்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X