பொது செய்தி

இந்தியா

நாட்டிற்கு முன் உதாரணமாக திகழும் சிவகங்கை காஞ்சிரங்கால் கிராம மக்கள்: பிரதமர் பாராட்டு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: ''குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார். இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.
MannKiBaat, PM Shri

புதுடில்லி: ''குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன் மூலம் சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இன்று மேஜர் தியான்சந்த் பிறந்த நாள் என்பதால் நமது நாடு, அவரின் நினைவை போற்றும் வகையில், இந்நாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் 41 ஆண்டுகள் கழித்து இந்திய ஹாக்கி அணி வீரர்கள் திறமையை நிரூபித்து உள்ளனர். நமது இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், ஹாக்கியில் மீண்டும் ஒரு முறை உயிரூட்டியிருக்கின்றார்கள். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடியும். ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டை பற்றி பேசுகின்றனர். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா பல உச்சங்களை அடைய முடியும். கிராமங்களில் தொடர்ச்சியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.


latest tamil news


இன்றைய இளைஞர்களின் மனங்கள், பழமைவாத வழிமுறைகளை விட்டு விலகி, புதிய ஒன்றை சாதிக்க விரும்புகின்றன. கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் துறையில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எல்லாம் உற்சாகத்தோடு விண்வெளித்துறையில் பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளனர். இதில், கல்லூரி, பல்கலைக்கழங்களில் படிக்கும் மாணவர்களின் பங்களிப்பு பெரிய அளவில் இருக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து நாம் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. பண்டிகைகளை அடுத்த தலைமுறையினருக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். குப்பையிலிருந்து மின்சாரம் தயாரித்து தங்களின் தேவைகளை தாங்களே பயன்படுத்திக் கொள்வதன் மூலம்
சிவங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள் நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202105:24:08 IST Report Abuse
முருகன் நாட்டில் ஏழைகள் தாங்கள் தேவைகளை தாங்களே செய்து கொள்ள வேண்டும் என மறைமுகமாக சொல்கிறார் .
Rate this:
Cancel
தேசியமும் தெய்வீகமும்   வீரத்தேவன் மோடி சர்கார் ஜெய்ஷிந்த்
Rate this:
Cancel
Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா
29-ஆக-202116:56:52 IST Report Abuse
Svs Yaadum oore தமிழ் நாட்டில் உள்ள தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களின் தினசரி கடன் வட்டி ரூ.180 கோடி. இதை அறிவித்தது வெள்ளை தாள் வெள்ளை அறிக்கை வெளியிட்ட தமிழ் தெரியாத நிதி அமைச்சர். இந்த வட்டிக்கு வரிப்பணம் எந்த தமிழன் கட்டுவான் ? . கார்பொரேட் கார்பொரேட் என்று கூவனும் ஆனால் கட்டுமர குடும்ப கம்பெனி கார்பொரேட் கிடையாது . அரசு வரி வருமானம் ஒரு ரூபாயில் 65 பைசா அரசு ஊழியர் சம்பளம் என்று நிதி,அமைச்சர் சொன்னதுக்கு அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோ ஜியோ எதிர்ப்பு. அவரிடம் இதுக்கு விளக்கம் கேட்கட்டும் .
Rate this:
29-ஆக-202118:48:01 IST Report Abuse
Vittal anand rao.அரசு ஊழியAர் சம்பளம் நிரந்தர செலவு. மீதி 40 தன் எனில் அந்த 40 ஐ அதிகப்படுத்த வேண்டும். ஆட்டையை போடக்கூடாது. கருணாநிதிக்கு ஆராதனை செலவுகள் திட்ட செலவுகளா° அல்லது குடிமை செLஅவுகளா? உபல தார மனி தனின் ஒழுக்கம் கெட்ட பிசுரலாறு உண்மையிலேயே படிக்க வேண்துமானால் கண்ணதாசனின் வனவாசம் படியுங்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X