பொது செய்தி

இந்தியா

பொய் செய்தியை தோலுரிக்க வேண்டும் : உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் பேச்சு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
புதுடில்லி : ''அரசின் பொய் செய்திகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமை அறிவார்ந்த சமூகத்தினருக்கு உள்ளது,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இது குறித்து டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்


புதுடில்லி : ''அரசின் பொய் செய்திகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமை அறிவார்ந்த சமூகத்தினருக்கு உள்ளது,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது. இது குறித்து டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:

பொய் செய்திகளை பரப்புவது அதிகரித்துள்ளது. கொரோனா குறித்து தவறான தகவல்கள் 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன.இதற்கு அந்நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும். அதேசமயம் மக்களுக்கும் பொறுப்பு உள்ளது. அவர்கள் விழிப்புடன் தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய வேண்டும்.

பொய் தகவல் என தெரிந்திருந்தாலும், பரபரப்பான செய்திகளை மக்கள் விரும்புகின்றனர். அது, மனித இயல்பு. ஜனநாயக நாட்டில் பொய் தகவல்கள், போலி செய்திகள் ஆகியவற்றுக்கு எதிரான பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் கடமை.அதேசமயம் அரசு கூறுவதெல்லாம் உண்மை என்ற நிலைப்பாட்டையும் எடுக்கக் கூடாது. அரசின் பொய் செய்திகளை தோலுரித்துக் காட்ட வேண்டிய கடமை, அறிவார்ந்த சமூகத்தினருக்கு உள்ளது.

உலக நாடுகள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பொய் செய்திகளை சார்ந்திருப்பதையும் நாம் பார்க்கிறோம். இதற்கு கொரோனா பாதிப்பு புள்ளி விபரங்களில் அதிகரித்து வரும் தகிடுதத்தங்களை உதாரணமாக கூறலாம்.அரசியல் அல்லது பொருளாதாரம் என எதுவாக இருப்பினும், பொய் தகவல்களை தடுக்க, எத்தகைய நெருக்கடிக்கும் இணங்காத, உண்மையின் உரைகல்லாக விளங்கும் ஊடகங்கள் அவசியம். நமக்கு பாரபட்சமற்ற முறையில் தகவல்களை வழங்கும் ஊடகங்கள் தான் தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X