இலங்கை தங்கம் கடத்தல் நெட்வொர்க் :கோவை போலீஸ் உட்பட மூவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இலங்கை தங்கம் கடத்தல் 'நெட்வொர்க்' :கோவை போலீஸ் உட்பட மூவர் கைது

Added : ஆக 29, 2021
Share
பல்லடம் : தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய நபரை கடத்திய சம்பவத்தில், போலீஸ்காரர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், அம்மாபாளையத்தில் வசித்தவர், மகேஸ்வரன், 26; கடந்த 26ம் தேதி, பல்லடம் பெரும்பாளி என்ற இடத்தில், காரில் வந்தபோது, பின்தொடர்ந்து வந்த, மூன்று கார்கள் திடீரென வழிமறித்தது. காரில் இருந்த, ஏழு பேர் கொண்ட கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது.பல்லடம்
 இலங்கை தங்கம் கடத்தல் 'நெட்வொர்க்' :கோவை போலீஸ் உட்பட மூவர் கைது



பல்லடம் : தங்கம் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடைய நபரை கடத்திய சம்பவத்தில், போலீஸ்காரர் உட்பட, மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், அம்மாபாளையத்தில் வசித்தவர், மகேஸ்வரன், 26; கடந்த 26ம் தேதி, பல்லடம் பெரும்பாளி என்ற இடத்தில், காரில் வந்தபோது, பின்தொடர்ந்து வந்த, மூன்று கார்கள் திடீரென வழிமறித்தது. காரில் இருந்த, ஏழு பேர் கொண்ட கும்பல் மகேஸ்வரனை கடத்தி சென்றது.பல்லடம் போலீசார் விசாரித்தனர்.

மூன்றில், ஒரு காரை மடத்துக்குளம் பகுதியில் போலீசார் கண்டனர். பின்னால் விரட்டி சென்ற போது, திண்டுக்கல் மாவட்டம், கீரனுார் அருகே காரை, கடத்தல் கும்பல் விட்டு சென்றது. செங்கல் சூளையில் பதுங்கிய சிலரை பிடித்தனர்.பல்லடம் டி.எஸ்.பி., தலைமையில், ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதுதொடர்பாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் கூறியதாவது:

மகேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்; ராஜேந்திரன் என்பவரிடம், வேலை செய்து வந்தார். இலங்கையில் இருந்து, தங்க பிஸ்கட் கடத்தி வரும் செயலுக்கு மகேஸ்வரன் உறுதுணையாக இருந்துள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன், மகேஸ்வரன், ஐந்து கிலோ பிஸ்கட்டை இலங்கையில் இருந்து கடத்தி வந்தார். அப்போது, ராமநாதபுரத்தில் காக்கி உடையிலிருந்த நபர்கள் துரத்தியதாகவும், தங்க பிஸ்கட்களை தவற விட்டு தப்பி வந்ததாகவும், ராஜேந்திரனிடம் தெரிவித்தார். இதை அவர் நம்பவில்லை.

ராஜேந்திரனிடம் கடத்தல் பணிக்காக முதலீடு செய்த, யாசர் அராபத், 34, முகமது ரிஸ்வான், 31 ஆகியோர் தங்க பிஸ்கட்களை ராஜேந்திரனிடம் கேட்டதை தொடர்ந்து, மகேஸ்வரனை ஒப்படைத்தார். ஒரு வாரம் அவர்களின் பிடியில் இருந்த மகேஸ்வரன் தப்பி சென்றார். பின், திருப்பூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியது தெரிந்தது.

மகேஸ்வரனிடம் இருந்து தங்க பிஸ்கட்களை மீட்க, முகமது ரிஸ்வான், யாசர் அராபத் ஆகியோர், தனக்கு தெரிந்த போலீஸ்காரர் ராஜேஸ்வரன் மற்றும் சிலருடன் கடத்தல் திட்டத்தை தயார் செய்தனர். மகேஸ்வரனை 26ம் தேதி கடத்தினர்.கடத்தலில் ஈடுபட்ட, முகமது ரிஸ்வான், யாசர் அராபத் மற்றும் குற்ற சம்பவத்துக்கு துணை புரிந்த கோவை போலீஸ்காரர் ராஜேஸ்வரன் கைது செய்யப்பட்டனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சிலரை தேடி வருகின்றோம்.

இவ்வாறு, போலீசார் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X