பொது செய்தி

தமிழ்நாடு

பெர்லின் மியூசியத்தில் தேனி புகைப்படம்: போட்டோகிராபர் சிவமூர்த்திக்கு கிடைத்த அங்கீகாரம்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் புகைப்பட கலைஞர் சிவமூர்த்தி 40, எடுத்த புகைப்படம் ஜெர்மனியின் பெர்லின் மியூசியத்தில் இடம் பெற்றுள்ளது. உலக புகைப்படக்காரர்கள் சம்மேளனம் நடத்திய போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இவர். திரைப்பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரிடம் உதவியாளராக இருந்து தற்போது தேனியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அளித்த
பெர்லின், மியூசியம், தேனி, புகைப்படம், போட்டோகிராபர், சிவமூர்த்தி,  அங்கீகாரம்

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் புகைப்பட கலைஞர் சிவமூர்த்தி 40, எடுத்த புகைப்படம் ஜெர்மனியின் பெர்லின் மியூசியத்தில் இடம் பெற்றுள்ளது. உலக புகைப்படக்காரர்கள் சம்மேளனம் நடத்திய போட்டியில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இவர். திரைப்பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரிடம் உதவியாளராக இருந்து தற்போது தேனியில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அளித்த பேட்டி...


புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம்...

பள்ளிப்படிப்பை முடித்து 'கர்ணன்' திரைப்பட ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரின் உறவினர் வீட்டின் அருகே குடியிருந்தோம். கூடலுாரில் திருமண நிகழ்வுக்கு உதவியாளராக அழைத்தார். யதார்த்தமான காட்சியை, புகைப்படம் மூலம் பதிவு செய்வதில் திறன் படைத்தவர் அவர். அவரிடம் 1996 - 2002 வரை பணியாற்றினேன். கலை நயத்துடன், புகைப்படங்களை பதிவு செய்வதை கற்றுத்தேர்ந்தேன்.


உலகப் புகைப்பட தின போட்டியில் பங்கேற்றது

மும்பை 'பெட்டர் போட்டோ கிராபி' இதழ் 2008ல் புகைப்பட போட்டி நடத்தியது. பங்கேற்ற 17 ஆயிரம் பேரில் 'தெரு புகைப்படம்' என்ற தலைப்பில் முதல் பரிசு பெற்றேன். தமிழ்நாடு புகைப்பட கலைஞர்கள் சங்கம் நடத்திய மாநில போட்டியில் 'மக்களின் வாழ்க்கை முறை' என்ற தலைப்பில் 600 பேர் பங்கேற்ற நிலையில் முதல் பரிசு பெற்றேன். 'பெஸ்ட் போட்டோகிராபி டுடே' இதழ் 2012ல் நடத்திய போட்டியில் 'செல்பி' தலைப்பில் எடுக்கப்பட்ட படம் பரிசு பெற்றது. இந்த படத்தை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் தேர்வு செய்தார். இது போல் 70க்கும் மேற்பட்ட போட்டிகளில் எனது திறனை வெளிப்படுத்தியுள்ளேன்.


பெர்லின் மியூசியத்தில் இடம் பெற்ற புகைப்படம் எப்போது எடுத்தீர்கள்...

உலக புகைப்படக்காரர்கள் சம்மேளனத்தில் உறுப்பினராக உள்ளேன். அதன் மூலம் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது. பல்வேறு நாடுகளில் இருந்து பல ஆயிரம் போட்டியாளர்கள் பங்கேற்ற போட்டி அது. அதற்காக தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில், தனது பிள்ளையை தோளில் சுமந்து கொண்டு வேப்பிலையை வைத்துக் கொண்டு வரும் தந்தையின் புகைப்படத்தை எடுத்தேன். அந்த புகைப்படம் கலாச்சார பதிவுக்காகவும், 'வர்ணங்களும் - கலவையும்' என்ற தலைப்பிற்காகவும் தேர்வாகி, பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. உலக அரங்கில் தமிழகத்திற்கும், தேனி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.
இவரை பாராட்ட 98426 - 38489.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
29-ஆக-202114:18:10 IST Report Abuse
THINAKAREN KARAMANI வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழாவில் எடுத்த புகைப்படம், ஜெர்மனியின் பெர்லின் மியூசியத்தில் இடம் பெற்றதன் மூலம் நம் தேனி மாவட்டத்திற்கும் வீரபாண்டி திருவிழாவிற்கும் பெருமை சேர்த்த புகைப்பட கலைஞர் சிவமூர்த்தி அவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். THINAKAREN KARAMANI, VELLORE, INDIA
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X