அரசியல் செய்தி

தமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரதமருக்கு ராமதாஸ் கடிதம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை : 'இந்தியாவில், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்' என, பிரதமருக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:தேசிய அளவில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான், மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய, அவசர நடவடிக்கை. அதற்கான தேவை அதிகரித்துள்ளது.தேசிய


சென்னை : 'இந்தியாவில், 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த வேண்டும்' என, பிரதமருக்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:

தேசிய அளவில், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தான், மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய, அவசர நடவடிக்கை. அதற்கான தேவை அதிகரித்துள்ளது.தேசிய அளவிலும், மாநில அளவிலும், இட ஒதுக்கீட்டிற்கு தொடர்ந்து, அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு கொண்டிருக்கின்றன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக, வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இட ஒதுக்கீட்டின் நியாயத்தை, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நிரூபிக்க, ஜாதிவாரி மக்கள் தொகை புள்ளி விவரங்கள் தேவை. நம்மிடம் அது இல்லை.கடந்த, 2011ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்த, அப்போதைய அரசு சம்மதித்தது. ஆனால், அது ஜாதி, சமூக, பொருளாதார கணக்கெடுப்பாக மாற்றப்பட்டது. அதன் விவரங்களும், இன்று வரை வெளியிடப்படவில்லை.

இந்தியாவில், 1931க்கு பின், 90 ஆண்டுகளாக நடத்தப்படாத, ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை, இந்த முறையாவது நடத்த, மத்திய அரசு முன்வர வேண்டும்.எனவே, 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்துவதற்கான, வரலாற்று சிறப்பு மிக்க ஆணையை, பிரதமர் பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X