பொது செய்தி

தமிழ்நாடு

குளு குளு 'கொடை'யில் ஓர் இயற்கை பூங்கா

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மனிதன் இயற்கையை சார்ந்து தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்ததால் தான் என்னவோ... இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கொடைக்கானல் அருகே வில்பட்டி அண்ணா ராமசாமி நகர் மிஸ்டி மவுண்டைன் குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்டு 'இயற்கை பூங்கா' அமைத்து முன்னோர்கள் வழியை பின்பற்றி வருகின்றனர்.இப்பகுதியில் 162 வீடுகள் உள்ளன. குடியிருப்பு அருகே அரசு தரிசு நிலம்
குளு குளு 'கொடை'யில் ஓர் இயற்கை பூங்கா

மனிதன் இயற்கையை சார்ந்து தான் வாழ வேண்டும் என்பதை உணர்ந்ததால் தான் என்னவோ... இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும் கொடைக்கானல் அருகே வில்பட்டி அண்ணா ராமசாமி நகர் மிஸ்டி மவுண்டைன் குடியிருப்புவாசிகள் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்டு 'இயற்கை பூங்கா' அமைத்து முன்னோர்கள் வழியை பின்பற்றி வருகின்றனர்.

இப்பகுதியில் 162 வீடுகள் உள்ளன. குடியிருப்பு அருகே அரசு தரிசு நிலம் சுமார் 3 ஏக்கரை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு வளமான இயற்கை பூங்கா அமைத்துள்ளனர். இதில் மூலிகை தோட்டம், பழ மரங்கள், சோலை மரங்கள், மலர் பூங்கா, புல்வெளி, தேனீ வளர்ப்பு, இயற்கை உரம் தயாரித்து மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகின்றனர்.

பூங்கா தலைவர் ராம்சங்கர் கூறியது: குடிநீருக்காக ஆக்கிரமிப்பில் இருந்த அரசு தரிசு நிலத்தை மீட்டு அரசும், குடியிருப்பு சங்கமும் இணைந்து குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினோம். அந்த நிலத்தில் சுகாதாரக்கேடு ஏற்படாமல் இருக்க பூங்கா அமைத்தோம். பூங்கா பராமரிப்பிற்காக மாதந்தோறும் குடியிருப்புவாசிகள் ரூ.40 ஆயிரம் செலவு செய்கிறோம். இங்கு வளர்க்கும் புல்லை கால்நடை வளர்ப்போர்க்கு கொடுத்து, அவர்களிடம் தொழு உரங்களை பெற்று பூங்காவை இயற்கை முறையில் பராமரிக்கிறோம். பார்வையாளர் அறையில் நுாலகம், ஒலி ஒளி அமைப்பு நிறுவியுள்ளோம். இங்கு மாணவர்கள் இயற்கை சூழல் குறித்து கற்று செல்கின்றனர், என்றார்.


தமிழகம் பசுமையாகும்

மதுரையை சேர்ந்த வைரசெல்வம் கூறியது: நானும் மிஸ்டி மவுண்டைன் குடியிருப்புவாசி தான். இங்குள்ள இயற்கை பூங்கா மனதிற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது. இவர்களை போல் மற்ற குடியிருப்பு சங்கத்தினரும் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்டு மரம், செடிகளை வளர்த்தால் தமிழகம் பசுமையாகும், என்றார்.
கொடைக்கானல் செல்பவர்கள் இந்த இயற்கை பூங்காவிற்கு விசிட் செய்யலாம். காலை 9:00 - மாலை 5:00 மணி வரை திறந்துஇருக்கும். அனுமதி இலவசம்.
மிஸ்டி மவுண்டைன் குடியிருப்பு சங்கத்தினரை வாழ்த்த 9445010767.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X