காபி தூளில் கண்கவர் ஓவியங்கள்: தூள் கிளப்பும் அருந்தமிழ் இலக்கியா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காபி தூளில் கண்கவர் ஓவியங்கள்: 'தூள் கிளப்பும்' அருந்தமிழ் இலக்கியா

Added : ஆக 29, 2021
Share
எண்ணங்களில் ஊடுருவும் மென்மை உணர்வுகளின் வெளிப்பாடே பலரின் கை வண்ணங்களில் உருவாகும் அழகோவியங்கள். அந்த வகையில் கண்கள் பார்க்கும் காட்சிகளை மனதில் நிறுத்தி சில நொடிகளில் அழகோவியமாக தீட்டி விடுகிறார் மதுரை மாணவி அருந்தமிழ் இலக்கியா.அ… ஆ… எழுத துவங்கிய போதே தன்னைஅறியாமல் கைகளால் கிறுக்கப்பட்ட கோடுகளும் ரசிக்கும் உருவங்களாக தோன்றியதை பெற்றோர் பாராட்டியது முதல்
காபி தூளில் கண்கவர் ஓவியங்கள்: 'தூள் கிளப்பும்'  அருந்தமிழ் இலக்கியா


எண்ணங்களில் ஊடுருவும் மென்மை உணர்வுகளின் வெளிப்பாடே பலரின் கை வண்ணங்களில் உருவாகும் அழகோவியங்கள். அந்த வகையில் கண்கள் பார்க்கும் காட்சிகளை மனதில் நிறுத்தி சில நொடிகளில் அழகோவியமாக தீட்டி விடுகிறார் மதுரை மாணவி அருந்தமிழ் இலக்கியா.

அ… ஆ… எழுத துவங்கிய போதே தன்னைஅறியாமல் கைகளால் கிறுக்கப்பட்ட கோடுகளும் ரசிக்கும் உருவங்களாக தோன்றியதை பெற்றோர் பாராட்டியது முதல் தற்போது வரை ஆயிரக்கணக்கான ஓவியங்களை வரைந்து வருகிறார். காப்பி துாளில் வரைந்த இவரது ஓவியங்கள் பெரும் பாராட்டு பெற்றன.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் நம்மிடம்…நான் பிளஸ் 1 மாணவி. எங்கள் வீட்டில் அப்பாவுக்கு கவிதை மீதும் அக்காவிற்கு கதை எழுதுவதிலும் ஆர்வம். அவர்களை பார்த்து ஓவியம் வரைய எனக்குஆர்வம் ஏற்பட்டது. ஆரம்பத்தில் என் பள்ளி தோழிகள் கேட்டதற்கு ஏற்ப பூக்கள், வண்ணத்துப் பூச்சி, மரம், செடிகளை படங்களாக வரைந்தேன். அதில் கிடைத்த பாராட்டுக்களால் எனக்கு மேலும் ஓவியத்தில் ஆர்வம் ஏற்பட்டது. நான் வரைந்த ஓவியங்களை என் அப்பா பல நாளிதழ்களுக்கு அனுப்பி வைப்பார். தினமலர் சிறுவர் மலர் உட்பட 30க்கும் மேற்பட்ட இதழ்களில் இடம் பெற்றுள்ளன.கார்ட்டூன் தொடர்கள். அதில் வரும் கதாபாத்திர முகக் காட்சிகளை 'ஸ்பீடாக' வரைய கற்றுக்கொண்டேன்.

அமைதியில் தவழ்ந்து வரும் இளையராஜா பாடல்களை கேட்டுக்கொண்டே வரைவது எனக்கு பிடிக்கும். ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓவியங்கள் உருவானது பாட்டும், இசையிலும் தான்.ஊரடங்கு காலத்தில் மொட்டை மாடியில் வானத்தை ரசிக்கும் போது மேகங்களால் உருவாகும் பல்வேறு காட்சிகள் என் ஓவியங்களுக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தன.பென்சில் ஓவியம், வண்ண ஓவியம், ஆயில், வாட்டர் கலர் மூலம் பல இயற்கை காட்சிகளை வடித்துள்ளேன். புதிய முயற்சியாக காபி துாள் மூலம் ஓவியம் வரைந்து வருகிறேன். நடிகர்கள் முதல் இயற்கை காட்சிகள் வரை அனைத்தும் காபி துாள் மூலம் கண் முன் கொண்டுவர முடியும்.
பென்சில் ஓவியங்கள் கொஞ்சம் சவாலானது. கோடுகள் மூலம் உயிர்பெற வைக்க வேண்டும். என் ஓவியங்களை 'வளம் + வறுமை = இந்தியா' என்ற தலைப்பில் மதுரையில் கண்காட்சி நடத்த திட்டம் உள்ளது. அதற்கான முயற்சிகளுடன் காத்திருக்கிறேன் என்றார் நம்பிக்கையாக.இவரை 8524013975ல் வாழ்த்தலாம்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X