சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரிசல் பயணத்தில் நிலக்கடலை எடுத்து வரும் விவசாயிகள்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021
Share
Advertisement
அவிநாசி: நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடாவில் உள்ள விவசாயிகள், 60 கி.மீ., பயணித்து, அவிநாசிக்கு வந்து, தங்களின் விளைபொருளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்து செல்கின்றனர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்குட்டப்பட்ட கடைகோடி கிராமம் தான் தெங்குமரஹடா. நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தில், நிலக்கடலை சாகுபடியில்
விவசாயி, பரிசல், நிலக்கடலை

அவிநாசி: நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் உள்ள தெங்குமரஹடாவில் உள்ள விவசாயிகள், 60 கி.மீ., பயணித்து, அவிநாசிக்கு வந்து, தங்களின் விளைபொருளை ஏலத்தின் மூலம் விற்பனை செய்து செல்கின்றனர்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி தாலுகாவுக்குட்டப்பட்ட கடைகோடி கிராமம் தான் தெங்குமரஹடா. நீலகிரி, ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் இக்கிராமத்தில், நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும், ஜூலை, ஆக., மாதம், அங்கு நிலக்கடலை அறுவடை செய்யப்படும். அவற்றை, சத்தியமங்கலம் வழியாக, அவிநாசி அருகே, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட ஏல மையத்தில் நடக்கும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் விவசாயிகள்.

விவசாயி சுரேஷ்குமார் கூறியதாவது: கடந்த, 15 ஆண்டுகளுக்கும் மேலாகவே, இந்த ஏல மையத்தில் தான், நிலக்கடலை விற்பனை செய்கிறோம். கடலை எண்ணெய், கடலை மிட்டாய் தயாரிப்புக்கு எங்களின் நிலக்கடலையை வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். எங்கள் ஊரில் உள்ள தெங்குமரஹடா, புதுக்காடு, சித்திரபட்டி, அல்லிமாயாறு, கல்லம்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள மக்கள் மாயாற்றை கடந்து தான், நிலக்கடலை எடுத்து வர வேண்டியுள்ளது. தண்ணீர் அதிகமாக ஓடும் போது, பரிசல் மூலமாகவோ, தண்ணீர் குறைவாக இருக்கும் போது, சரக்கு வாகனத்தின் உதவியுடன், ஆற்றைக்கடந்து, நிலக்கடலை எடுத்து வருகிறோம்; இதனால், போக்குவரத்து செலவு அதிகம்.


latest tamil news


ஏல மையத்தில் ஓரிரு நாள் தங்கியிருந்து, நிலக்கடலையை விற்பனை செய்துவிட்டு செல்வோம். இத்தகைய சிரமத்தால், நிலக்கடலை விவசாயத்தை பலரும் கைவிட்டனர். 100 ஏக்கர் வரை சாகுபடி நடந்த நிலையில், தற்போது, 15 ஏக்கருக்கும் குறைவாக தான் சாகுபடி செய்யப்படுகிறது. வாழை, மஞ்சள் சாகுபடிக்கு விவசாயிகள் மாறிவிட்டனர். விவசாயிகள் படும் சிரமத்தால், அவர்களது பிள்ளைகள் வேறு தொழிலை நாடிச் செல்கின்றனர். மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்தால் மட்டுமே, விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள, குடும்பங்களின் வாழ்வாதாரம் செழிக்கும். ஒவ்வொரு முறை தேர்தலின் போதும், பாலம் அமைத்து தருவதாக அரசியல் கட்சியினர் வாக்குறுதி அளிக்கின்றனர்.

நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில், வெற்றி பெற்ற எங்கள் தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சராகவும் உள்ளார். அவர், மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்துக் கொடுத்து, தெங்குமரஹடா மக்களின் தலைமுறை தழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X