விவசாயிகள் மீது தடியடி: எதிர்க்கட்சிகள் கண்டனம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சண்டிகர் : ஹரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை கண்டித்து, மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் நேற்று பேரணி நடத்தினர்.இதனால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கர்னல்

சண்டிகர் : ஹரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்களை கண்டித்து, மாநிலத்தின் பல இடங்களில் விவசாயிகள் நேற்று பேரணி நடத்தினர்.இதனால் பல இடங்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கர்னல் நகரில் நடந்த பா.ஜ., கூட்டத்துக்கு முதல்வர் மனோகர்லால் கட்டார், பா.ஜ., தலைவர் ஓம் பிரகாஷ் தன்கர் மற்றும் மூத்த தலைவர் சென்று கொண்டிருந்தனர்.

டில்லி நெடுஞ்சாலையில் கர்னல் சுங்கச்சாவடி அருகே போராட்டம் நடத்திய விவசாயிகள், முதல்வர் உள்ளிட்ட தலைவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.போலீசார் தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர். இதில், 10 விவசாயிகள் பலத்த காயம் அடைந்தனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X