சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகூரில் தர்கா ஆதினத்தை கத்தியால் குத்தியவர் கைது

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : நாகூரில் தர்கா ஆதினத்தை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் ஷேக்முகமது,38. தர்கா ஆதினம். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். யாரும் இல்லாததால் அக்கம்பக்கம் தேடியுள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் துாங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கேட்டுள்ளார்.

நாகப்பட்டினம் : நாகூரில் தர்கா ஆதினத்தை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை அடுத்த நாகூரைச் சேர்ந்தவர் ஷேக்முகமது,38. தர்கா ஆதினம். நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவை திறந்துள்ளார். யாரும் இல்லாததால் அக்கம்பக்கம் தேடியுள்ளார். இவரது வீட்டிற்கு அருகில் துாங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பி கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர் கத்தியால் ஷேக்முகமதுவை குத்தியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். கத்தியால் குத்திய நபரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயமடைந்த ஷேக்முகமது நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், 'கத்தியால் குத்திய நபர் மதுரையைச் சேர்ந்த ராஜா,26. மனநலம் பாதித்து ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்தவர் சில ஆண்டுகளுக்கு முன் நாகூருக்கு வந்துள்ளார். கூலி வேலைகளுக்கு சென்று விட்டு இரவு நேரங்களில் அப்பகுதியில் உள்ள வீட்டின் திண்ணைகளில் படுத்து உறங்கி வந்துள்ளார். போலீசார் ராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X