உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு 9 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உயர்நீதிமன்றம், மதுரை கிளைக்கு 9 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள்

Added : ஆக 29, 2021
Share
சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக, ஒன்பது வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பதவி வகிக்கிறார். அரசு பிளீடர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.அவற்றை பரிசீலித்து,

சென்னை : சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக, ஒன்பது வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பதவி வகிக்கிறார். அரசு பிளீடர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பதவிகளுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.அவற்றை பரிசீலித்து, உரிய நடைமுறையை பின்பற்றி, அரசு பிளீடர் மற்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல்களை நியமித்திருப்பதாக, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, கூடுதல் அட்வகேட் ஜெனரல்களாக, மூத்த வழக்கறிஞர்கள் ஹாஜா நசிருதீன், எஸ்.சிலம்பண்ணன், வழக்கறிஞர்கள் ஆர்.ரமண்லால், வி.அருண், பி.குமரேசன், ஆர்.நீலகண்டன், ஜெ.ரவீந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மதுரை கிளைக்கு, மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், வழக்கறிஞர் ஆர்.பாஸ்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அரசு பிளீடராக, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, வழக்கறிஞர் பி.முத்துக்குமார்; மதுரை கிளைக்கு வழக்கறிஞர் திலக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X