மண்டபங்களில் நிகழ்ச்சிக்கு தாசில்தார் அனுமதி தேவை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'மண்டபங்களில் நிகழ்ச்சிக்கு தாசில்தார் அனுமதி தேவை'

Added : ஆக 29, 2021
Share
கோவை : 'திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், ஒரு வாரம் முன் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும்' என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.கலெக்டர் சமீரன் அறிக்கை: கொரோனா பரவல் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமை.மண்டபங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்


கோவை : 'திருமண மண்டபங்களில் நிகழ்ச்சி நடத்துவோர், ஒரு வாரம் முன் தாசில்தாரிடம் அனுமதி பெற வேண்டும்' என்று கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கலெக்டர் சமீரன் அறிக்கை:

கொரோனா பரவல் தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டியது பொதுமக்களின் கடமை.மண்டபங்களில் நடக்கும் திருமணம் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை ஒரு வாரத்துக்கு முன் சம்பந்தப்பட்ட தாசில்தார்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என திருமண மண்டப உரிமையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமணம், இதர நிகழ்ச்சி நடத்தலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X