பொது செய்தி

தமிழ்நாடு

நிமிடங்கள் போதும்... ஆன்லைன் ஸ்டோர் அமைக்கலாம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
நம் நாட்டில், இணைய ஆதிக்கம், ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி காரணமாக, மின்னணு வணிகம்(இ-காமர்ஸ்) பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. சிறிய சில்லறை விற்பனையாளர்கள் கூட, தங்கள் தொழிலை பெரிதாக வளர்க்க,'இ-காமர்ஸ்' தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.வணிகம் செய்யும் முறையை 'இ- காமர்ஸ்' மாற்றியுள்ளது. 2017ல், நம் நாட்டின், 2.89 லட்சம் கோடி ரூபாயாகஇருந்த இச்சந்தை, 2026ல் 15 லட்சம் கோடிரூபாயாக வளரும்



நம் நாட்டில், இணைய ஆதிக்கம், ஸ்மார்ட்போன் சந்தை வளர்ச்சி காரணமாக, மின்னணு வணிகம்(இ-காமர்ஸ்) பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது.
சிறிய சில்லறை விற்பனையாளர்கள் கூட, தங்கள் தொழிலை பெரிதாக வளர்க்க,'இ-காமர்ஸ்' தேவை என்ற நிலை ஏற்பட்டுள்ளது.வணிகம் செய்யும் முறையை 'இ- காமர்ஸ்' மாற்றியுள்ளது. 2017ல், நம் நாட்டின், 2.89 லட்சம் கோடி ரூபாயாகஇருந்த இச்சந்தை, 2026ல் 15 லட்சம் கோடிரூபாயாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்., 2020 நிலவரப்படி, நாட்டில் உள்ள மொபைல் போன் இணைப்புகளின் எண்ணிக்கை 77.6 கோடியாக உயர்ந்தது. 'ஆன்லைன்' சந்தையில், மளிகை சந்தை 2019ல் 15,000 கோடி ரூபாயாக இருந்தது.2024ல், இது 1.35 லட்சம் கோடி ரூபாயைஎட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 'இ- - காமர்ஸ்' ஆர்டர்கள் அளவு,2020 கடைசிகாலாண்டில் 36 சதவீதம் அதிகரித்துள்ளது.

என்ன பயன்?

'ஆன்லைன்' வணிகம் மூலம் பல பயன்கள் உள்ளன; அவற்றில்,சில... அதிகப்படியான கவரேஜ் ஏரியாக்கள். அகில இந்திய அளவில் உங்கள் பொருட்கள் கொண்டு செல்லலாம். விரைவான ஆர்டர் செயலாக்கம். அதிக வாடிக்கையாளர்களை அடைய முடியும். அபரிதமான வளர்ச்சி.'பிக்ரி' (Bikry) என்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனம், சிறு வணிகங்கள் எந்த கட்டணமும் இல்லாமல் ஆன்லைன் ஸ்டோர் அமைக்க உதவுகிறது. ஒரு ஆன்லைன் ஸ்டோர் அமைக்க மூன்றே நிமிடம் போதும் என்பது, பலருக்கும் ஆச்சர்யம் அளிக்கலாம். அவ்வளவு எளிதாக, இவர்களது இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

என்ன பொருட்கள்?

மளிகைப்பொருட்கள், ஸ்டேஷனரி, ஆடைகள், மொபைல்போன், கம்ப்யூட்டர், உணவகம், பேக்கரி, பார்மசி, வெற்றிலை - பாக்கு கடை, புத்தகம், ப்ரஷ் சிக்கன் - மட்டன், ஹார்டுவேர், கட்டுமானப் பொருட்கள், ஜூவல்லரி,போக்குவரத்து சுற்றுலா, ஜிம், விளையாட்டு சாதனங்கள் விற்பனையாளர்களுக்கு, ஆன்லைன் ஸ்டோர் அமைக்க இது ஒரு சிறந்த தளம்.இவர்களது இணையதளம்www.bikry.com.ஆன்லைன் ஸ்டோர் அமைக்க உதவும் மற்ற 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் உள்ளன; இவற்றில் பலர் இலவசமாகவும், கட்டண சேவையாகவும் செயலாற்றுகின்றனர்.www.e-vaadikkai.com, www.instamojo.com, www.shopify.in, www.ecwid.com, www.krenai.com, www.cartin.in

சந்தேகங்களுக்கு:இ--மெயில்:sethuraman.sathappan@gmail.com, இணையதளம்:www.startupandbusinessnews.comஅலைபேசி:98204 51259
- சேதுராமன் சாத்தப்பன் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X