சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியிடம் நகை பறிக்க முயற்சி: தடுத்த கணவனுக்கு வெட்டு

Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்துார் அருகே மனைவியின் தாலிக்கயிற்றை அறுப்பதற்கு முயன்ற மர்ம நபரை தடுத்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன், 62. இவர், தனது மனைவி தனம், 60, என்பவருடன் நேற்று, இரவு வீட்டில் பாதி கதவு திறந்த நிலையில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:30 மணியளவில் வீட்டுக்குள்
மனைவியிடம் நகை பறிக்க முயற்சி: தடுத்த கணவனுக்கு வெட்டு

ஆத்தூர்: ஆத்துார் அருகே மனைவியின் தாலிக்கயிற்றை அறுப்பதற்கு முயன்ற மர்ம நபரை தடுத்த கணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர், முல்லைவாடி பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன், 62. இவர், தனது மனைவி தனம், 60, என்பவருடன் நேற்று, இரவு வீட்டில் பாதி கதவு திறந்த நிலையில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு, 12:30 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த, 27 வயதுடைய அடையாளம் தெரியாத வாலிபர் தனத்தின் கழுத்தில் இருந்த தாலிக்கயிற்றை அறுக்க முற்பட்ட போது, அவர் சத்தம் போட்டுள்ளார்.
அதையறிந்த கணவர் ராஜேந்திரன், மனைவி தாலிக்கயிறை பிடித்து, அந்த மர்ம நபரை பிடிக்க முயன்றபோது, அந்த நபர் கையில் வைத்திருந்த அரிவாளால் வலது பக்க கழுத்து, இடது கையில் விவசாயி ராஜேந்திரனை வெட்டி விட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன், ஆத்தூர் அரசு மருத்துமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
30-ஆக-202111:03:24 IST Report Abuse
SENTHIL NATHAN திருட்டு பசங்களுக்கு கால் ஓடிய வேண்டும்
Rate this:
Cancel
29-ஆக-202115:59:28 IST Report Abuse
Gopalakrishnan S தமிழ் நாடு அமைதிப் பூங்கா !
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X