பொது செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் முதிர்வு தொகை வாங்க அழைப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
அன்னூர் : 'இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், 18 வயது பூர்த்தியானவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா ரூ.25 ஆயிரமும், 18 வயது முடிந்த

அன்னூர் : 'இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில், 18 வயது பூர்த்தியானவர்கள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில், இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், ரூ.50 ஆயிரமும், இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால், தலா ரூ.25 ஆயிரமும், 18 வயது முடிந்த பிறகு, முதிர்வுத் தொகை வட்டியுடன் சேர்த்து பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் விண்ணப்பித்து, அசல் வைப்புநிதி பத்திரம் வைத்துள்ள 18 வயது பூர்த்தியானவர்கள், அசல் பத்திரம், பயனாளியின் போட்டோ, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மதிப்பெண் பட்டியல், பயனாளியின் பெயரிலான வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவற்றை, சமர்ப்பித்து நிதியை பெறலாம்.அதற்கான நிதி தற்போது அரசிடம் இருந்து வந்துள்ளது.

எனினும் பத்திரம் வைத்துள்ளவர்கள் பலர், 18 வயது பூர்த்தியாகியும் விண்ணப்பிக்காமல் உள்ளனர்.அன்னூர் வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள், 7094323813 என்னும் எண்ணையும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தைச் சேர்ந்தவர்கள், 81487 83436 என்னும் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம், என சமூக நலத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X