அரசுக்கு எதிராக போராட்டம் : கிராம உதவியாளர்கள் முடிவு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சேலம் : காலமுறை ஊதியம் கேட்டு, கிராம உதவியாளர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க, மாநில செயற்குழு, நேற்று சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். அதில், அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளருக்கு காலமுறை ஊதியம், 15 ஆயிரத்து, 700 ரூபாய் தேவை; 10 ஆண்டு பணி நிறைவு செய்த, கிராம உதவியாளருக்கு, 50 சதவீத வி.ஏ.ஓ., பதவி உயர்வு

சேலம் : காலமுறை ஊதியம் கேட்டு, கிராம உதவியாளர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க, மாநில செயற்குழு, நேற்று சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ராஜசேகர் தலைமை வகித்தார். அதில், அலுவலக உதவியாளருக்கு இணையாக கிராம உதவியாளருக்கு காலமுறை ஊதியம், 15 ஆயிரத்து, 700 ரூபாய் தேவை; 10 ஆண்டு பணி நிறைவு செய்த, கிராம உதவியாளருக்கு, 50 சதவீத வி.ஏ.ஓ., பதவி உயர்வு அளிப்பதோடு, பணி நிறைவு காலத்தை, 5 ஆண்டாக குறைத்தல்; பொங்கல் போனஸ், 7,000 ரூபாய் வழங்குதல் என்பன உள்ளிட்ட, 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சேலம் மாவட்ட தலைவர் பாபு ஆனந்தன் உள்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, மாநில பொதுச்செயலர் தமிழ்செல்வன் கூறியதாவது:

அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் கிராம உதவியாளருக்கு, 30 ஆண்டாக காலமுறை ஊதியம் கிடைக்கவில்லை. கலெக்டர் முதல், வி.ஏ.ஓ., வரை வழங்கப்படும் காலமுறை ஊதியம், எங்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. நம்பி ஓட்டுப்போட்ட எங்களின் பிரச்னையை, தி.மு.க., அரசு தீர்க்காவிடில், உள்ளாட்சி தேர்தல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X