3 அடி உயர பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கல்| Dinamalar

3 அடி உயர பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கல்

Added : ஆக 29, 2021
Share
சேலம் : சேலம் மாவட்டம், ஓமலுார், கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை மகள் அருணா, 26. வயதுக்கு ஏற்ப, வளர்ச்சி இல்லாத இவர், 3 அடி உயரம் மட்டுமே உள்ளார். அதனால், வேலைக்கு செல்ல முடியாததால், மாற்றுத்திறனாளி சான்றிதழ் கேட்டு, கடந்த, 24ல் கலெக்டருக்கு விண்ணப்பித்தார். மனு மீது நடவடிக்கை எடுக்க, சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபாலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.அதையேற்று,
 3 அடி உயர பெண்ணுக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வழங்கல்

சேலம் : சேலம் மாவட்டம், ஓமலுார், கோட்டகவுண்டம்பட்டியை சேர்ந்த அண்ணாமலை மகள் அருணா, 26. வயதுக்கு ஏற்ப, வளர்ச்சி இல்லாத இவர், 3 அடி உயரம் மட்டுமே உள்ளார். அதனால், வேலைக்கு செல்ல முடியாததால், மாற்றுத்திறனாளி சான்றிதழ் கேட்டு, கடந்த, 24ல் கலெக்டருக்கு விண்ணப்பித்தார்.

மனு மீது நடவடிக்கை எடுக்க, சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபாலுக்கு பரிந்துரைக்கப்பட்டது.அதையேற்று, உடலியல் மருத்துவம், மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் உடல் பரிசோதனை நடத்தப்பட்டு, நேற்று, தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி சான்றிதழை, கலெக்டர் கார்மேகம் வழங்க, அருணா பெற்றுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளி மருத்துவ துறை தலைவர் நித்யாமனோஜ் கூறுகையில், ''அருணாவுக்கு உடல் அளவில், 8 வயதுக்குரிய வளர்ச்சி மட்டும் உள்ளதால் உடனே சான்று வழங்கப்பட்டது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X