அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இலங்கை தமிழர் நலன் காக்கும் அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை'

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை : 'இலங்கை தமிழர்களின் நலன் காக்க, மத்திய அரசுடன், மாநில அரசு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து, இலங்கை தமிழர் பிரச்னையில், அதிக கவனம் செலுத்தி வருகிறார். யாழ்பாணத்திற்கு முதன் முதலில் சென்ற பிரதமர் என்ற பெருமை மோடியையே சாரும்.இந்தியாவின் உதவியால், வடகிழக்கு


சென்னை : 'இலங்கை தமிழர்களின் நலன் காக்க, மத்திய அரசுடன், மாநில அரசு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து, இலங்கை தமிழர் பிரச்னையில், அதிக கவனம் செலுத்தி வருகிறார். யாழ்பாணத்திற்கு முதன் முதலில் சென்ற பிரதமர் என்ற பெருமை மோடியையே சாரும்.இந்தியாவின் உதவியால், வடகிழக்கு இலங்கையில், குடிபெயர்ந்த தமிழர்களுக்கு, 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்களின் உரிமை தொடர்பான பிரச்னையை, இலங்கை அரசிடம், மத்திய அரசு தொடர்ந்து பேசி வருகிறது.

இலங்கை தமிழர்கள் சமத்துவத்துடனும், கண்ணியத்துடன் வாழ, மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.இந்நிலையில், தமிழகத்திற்கு புலம் பெயர்ந்துள்ள இலங்கை தமிழர்களின் நலன் காக்க, தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.இலங்கை தமிழர்களின் வீட்டுவசதி, கல்வி திட்டங்களுக்காக, 317 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இலங்கை தமிழர்களின் நலன் காக்க, மத்திய அரசுடன், மாநில அரசு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே, தமிழக பா.ஜ.,வின் கோரிக்கை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X