அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஈழத் தமிழர்களுக்கு ஒதுக்கீடு தேவை'

Added : ஆக 29, 2021
Share
Advertisement
சென்னை : 'ஈழத்தமிழ் அகதிகளுக்கு, மருத்துவ கல்வியில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.அவரது, 'டுவிட்டர்' பதிவு:தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும், ஈழ அகதிகளுக்கு, வீட்டு வசதி, குடிநீர் வசதி, மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்காக, 317 கோடி ரூபாயில், 10 புதிய நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டம்


சென்னை : 'ஈழத்தமிழ் அகதிகளுக்கு, மருத்துவ கல்வியில் ஒதுக்கீடு வழங்க வேண்டும்' என, பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

அவரது, 'டுவிட்டர்' பதிவு:

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும், ஈழ அகதிகளுக்கு, வீட்டு வசதி, குடிநீர் வசதி, மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை ஆகியவற்றுக்காக, 317 கோடி ரூபாயில், 10 புதிய நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்துள்ளார். இத்திட்டம் வரவேற்கத்தக்கது.மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு தேவை என்பது, ஈழத்தமிழ் அகதிகளின் நீண்ட நாள் கோரிக்கை.

இது, எம்.ஜி.ஆர்., காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்டு, கருணாநிதி ஆட்சியில், கட்டண விலக்கு அளிக்கப்பட்ட, மிகச்சிறந்த திட்டம். அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.ஈழத்தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு, மருத்துவ கல்வியில், சிறப்பு ஒதுக்கீடு வழங்குவதில், சட்ட சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், அதை களைந்து மீண்டும் செயல்படுத்த, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X