கொடைக்கானலில் குவிந்த பயணிகள்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து குவிந்தனர்.குடும்ப சகிதமாக குவிந்த பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, ஏரியில் படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதலே வந்த வாகனங்கள் பெருமாள் மலை -வெள்ளி நீர்வீழ்ச்சி - சோதனைச்சாவடி இடையே நீண்ட வரிசையில்
 கொடைக்கானலில் குவிந்த பயணிகள்

கொடைக்கானல் : கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து குவிந்தனர்.

குடும்ப சகிதமாக குவிந்த பயணிகள் இங்குள்ள பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா, ஏரியில் படகு சவாரி, குதிரை, சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதலே வந்த வாகனங்கள் பெருமாள் மலை -வெள்ளி நீர்வீழ்ச்சி - சோதனைச்சாவடி இடையே நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.வெள்ளி நீர்வீழ்ச்சி, கலையரங்கம், செவன் ரோடு உள்ளிட்ட பிரதான ரோட்டில் நிறுத்தப்பட்ட வாகனங்களால் நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு ரம்யமான சூழல் நிலவியதை பயணிகள் ரசித்தனர்.நகரில் கூட்ட நெரிசலை தவிர்க்க வன சுற்றுலா தலங்கள் மற்றும் பேரிஜம், மன்னவனூர் சூழல் சுற்றுலா மையத்தை திறக்க பயணிகள் வலியுறுத்தினர். இதனால் நகரில் குவியும் பயணிகள் பிறஇடங்களுக்கு பெயரும் வாய்ப்பு ஏற்படும் என கருதுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X