பொது செய்தி

இந்தியா

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு செப்., 30 வரை தடை

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கொரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து
FLIGHT, INTERNATIONAL, TRANSPORT, BAN, சர்வதேச, விமானம், போக்குவரத்து, தடை நீடிப்பு

புதுடில்லி: ‛‛கொரோனா தொற்று பரவல் காரணமாக சா்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,'' என்று இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டு மாா்ச் மாத இறுதியில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியது. அதைத் தொடா்ந்து சா்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளுக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை பரவியதைத் தொடா்ந்து சா்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது.


latest tamil news


இத்தகைய சூழலில் உலக அளவில் கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால், பயணிகள் விமான சேவைகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. எனினும் சரக்கு விமானப் போக்குவரத்துக்கு எந்தத் தடையுமில்லை என இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.

'ஏா் பபுள்' விதிகளின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் தொடா்ந்து இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 'ஏா் பபுள்' விதிகளைக் கடைப்பிடித்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே ஒப்பந்த அடிப்படையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
29-ஆக-202118:21:36 IST Report Abuse
அப்புசாமி பெரிய காமெடி இதுதான். அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கில் பயணியர் வந்து இறங்குகிறார்கள். எங்க அப்பார்ட்மெண்ட்டில் கூட நாலு பேர் அமரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள். சென்னை ஏத்போர்ட்டில் 900 ரூவா கட்டி கோவிட் டெஸ்ட் கூட எடுத்துக் கொண்டார்களாம். இவிங்க யாருக்கு தடைன்னு சொல்றாங்க புரியலை.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
30-ஆக-202106:58:54 IST Report Abuse
vadiveluகாமெடி இல்லை, வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியா திரும்ப அந்நாடுகள் அதிக கட்டுப்பாடுகளை விதித்து தடை விதிக்க வில்லை.ஆனால் இங்கிருந்து அங்கு வர கடுமையான தடைகளை விதித்து இருக்கிறார்கள்.மிக அவசியமாக செல்ல வேண்டியவர்கள் அவசர விசா அனுமதி பெற்றுத்தான் செல்ல முடியும்.அவர்களும் அவர்கள் நாடு மக்கள் இந்தியாவில் இருந்து திரும்ப வர அனுமதி மறுக்க வில்லை.இதுதான் இப்போது நடக்கிறது.பயணிகள் ஆயிர கணக்கில் இந்தியா வந்து இறங்கி இருக்கலாம், ஆனால் அவர்கள் திரும்ப போவதற்கு அதிக கட்டுப்பாடுகள் உள்ளது.இந்த கட்டு பாடுகள் இல்லை என்றால் தினமும் லட்ச கணக்கில் பயணியர் வருகை இருக்கும்.புரிதல் மிக அவசியம்....
Rate this:
Cancel
29-ஆக-202118:05:35 IST Report Abuse
Vittal anand rao. முதலில் இந்த மலையாளIகளை தடை செய்ய வேண்டும்
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
30-ஆக-202106:28:19 IST Report Abuse
கௌடில்யன்அம்மணி சொன்னதா ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X