பொது செய்தி

இந்தியா

சிறிய ரக டுரோன்களை இயக்க பைலட் லைசென்ஸ் தேவையில்லை: மத்திய அரசு

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛வணிகமல்லாத காரணங்களுக்காக நானோ மற்றும் மைக்ரோ டுரோன்களை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவையில்லை,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளை கடந்த மார்ச்சில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை
டுரோன்,லைசென்ஸ்,  மத்திய அரசு

புதுடில்லி: ‛‛வணிகமல்லாத காரணங்களுக்காக நானோ மற்றும் மைக்ரோ டுரோன்களை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவையில்லை,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளை கடந்த மார்ச்சில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

*புதிய டுரோன் விதிகள் இந்தியாவில் ட்ரோன்களை வணிக நோக்கமற்ற பயன்பாடு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. உதாரணமாக, இந்தியாவின் புதிய ட்ரோன் விதிகளின்படி, சிறிய டுரோன்களை இயக்க மற்றும் பறக்க உங்களுக்கு பாதுகாப்பு அனுமதி தேவையில்லை. கூடுதலாக, சரக்கு விநியோகங்களை எளிதாக்க அரசு டுரோன் நடைபாதைகளை உருவாக்குகிறது.

*புதிய டுரோன் விதிகளானது, வணிக நோக்கமற்ற பயன்பாடு உட்பட பல்வேறு நோக்கங்களுக்காக டுரோன்கள் பயன்படுத்துவதை எளிதாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளன. புதிய விதிகளின்படி, சிறிய டுரோன்களை இயக்குவதற்கு பாதுகாப்பு அனுமதி தேவையில்லை.

*புதிய விதிகள் மூலம், ஏராளமான தொழிற்துறையினர் டுரோன்களை பயன்படுத்துவது அதிகரிக்கும் என மத்திய அரசு நம்புகிறது.

* தனித்துவமான அங்கீகார எண், தனித்துவமான முன்மாதிரி அடையாள எண், உறுதிப்படுத்தல் சான்றிதழ், பராமரிப்பு சான்றிதழ், இறக்குமதி அனுமதி, ஏற்கனவே உள்ள டுரோன்களை ஏற்றுக்கொள்வது, ஆபரேட்டர் அனுமதி, ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்பின் அங்கீகாரம், பைலட் உரிமம், தொலைநிலை (ரிமோட்) பைலட் பயிற்றுவிப்பாளர் அங்கீகாரம், டுரோன் போர்ட் அங்கீகாரம் போன்ற ஒப்புதல் பெறும் அம்சங்கள் ஆகியவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன.

* டுரோன் விதிகள், 2021-இன் கீழ் இயங்கும் டுரோன்களில் கொண்டு செல்லப்படும் எடை, 300 கிலோவிலிருந்து 500 கிலோவாக உயர்த்தப்பட்டுள்ளது.


latest tamil news* அதிகபட்ச அபராதம், ரூ.1 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், பிற சட்டங்களை மீறுவது தொடர்பான அபராதங்களுக்கு இது பொருந்தாது.

* விமான நிலைய சுற்றளவிலிருந்து மஞ்சள் மண்டலம் 45 கி.மீ., முதல் 12 கி.மீ., வரை குறைக்கப்பட்டது. பச்சை மண்டலங்களில் 200 அடி வரையும் விமான நிலைய சுற்றளவில் இருந்து 8 முதல் 12 கி.மீ., வரை உள்ள பகுதியில் 200 அடி வரையும், அனுமதி தேவையில்லை.

*அனைத்து வகை டுரோன்களையும் இயக்குவதற்கு, பதிவு செய்வது கட்டாயம். இதனை ஆன்லைன் முறையில் செய்யலாம்.

*வணிகரீதியில் அல்லாத பயன்பாட்டிற்கு மைக்ரோ மற்றும் நானோ டுரோன்களை இயக்குவதற்கு பைலட் உரிமம் தேவையில்லை.

*பெரிய ரக டுரோன்களை இயக்கும் பைலட்களுக்கான உரிமம், 3,000 ரூபாயாகவும், இதர டுரோன்களுக்கு 100 ரூபாய் என்றும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த உரிமம் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

*டுரோன்களை இயக்க 25 விதமான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பல்வேறு அனுமதி சான்றிதழ்கள் பெற வேண்டிய நிலையை மாற்றி, ஐந்து விண்ணப்பங்களாக குறைக்கப்பட்டு உள்ளன.

*'அனுமதி இல்லாமல் டேக்-ஆப் இல்லை' (என்.பி.என்.டி), நிகழ்நேர கண்காணிப்பு பெக்கான், ஜியோ-பென்சிங் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும். இவற்றை கடைபிடிப்பதற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்படும்.


latest tamil news*அனைத்து டுரோன் பயிற்சி மற்றும் சோதனைகள், அங்கீகரிக்கப்பட்ட டுரோன் பள்ளியால் மேற்கொள்ளப்பட வேண்டும். பயிற்சி தேவைகளை டி.ஜி.சி.ஏ., பரிந்துரைக்கும். டுரோன் பள்ளிகளை மேற்பார்வையிடும் மற்றும் பைலட் உரிமங்களை ஆன்லைனில் வழங்கும்.

*ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் டுரோன்களை இயக்குவதற்கு சான்றிதழ், பிரத்யேக அடையாள எண் மற்றும் முன் அனுமதி தேவையில்லை.

*இறக்குமதி செய்யப்படும் டுரோன்களை வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் ஒழுங்குமுறைப்படுத்தும்.

*இந்தியாவில் பதிவு பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள் டுரோன்கள் இயக்க தடைகள் இல்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
spr - chennai,இந்தியா
30-ஆக-202102:27:48 IST Report Abuse
spr "வணிகமல்லாத காரணங்களுக்காக நானோ மற்றும் மைக்ரோ டுரோன்களை இயக்குவதற்கு பைலட் லைசென்ஸ் தேவையில்லை,'' என மத்திய அரசு தெரிவித்துள்ளது.வணிகத்திற்காக அனுமதி அளிப்பதில் கூட கண்காணிப்பு அவசியம் ஆளில்லா சிறிய ரக விமானங்களை இயக்குவதற்கான விதிமுறைகளை கடந்த மார்ச்சில் மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. இந்த விதிமுறைகளில் தற்போது பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு உள்ளது" இந்த தளர்வுக்குக் காரணம் புரியவில்லை வம்பை விலைக்கு வாங்குகிறோமோ? யு ட்யூப் மூலம் முகநூல் போன்ற வழிகளில் தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு பிரச்சினை உண்டாகிறது அண்மையில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் டுரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது பயங்கர வாதம் அதிகரிக்கும் நிலையில், மூளைச்சலவை செய்யப்பட்ட உணர்ச்சிகளால் தூண்டப்படும் இளைஞர்கள் அதிகமுள்ள நிலையில் ஆளில்லாமல் இத்தகு தாக்குதல்களை நடத்த வாய்ப்பளிக்கும் இந்த டுரான்களை அனுமதியில்லாமல் இயக்கலாம் என்ற இந்த முடிவு சரியானதா எனத் தெரியவில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X