பொது செய்தி

இந்தியா

ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்; ஜனாதிபதி

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
அயோத்தி: ‛‛ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்,'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமாயண கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: ராமாயணத்தை, கலை மற்றும் கலாசாரம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல ராமாயண கருத்தரங்கை ஏற்பாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது
Ramayanam, President, Ramnathkovind,  ராமாயணம், ஜனாதிபதி, ராம்நாத்

அயோத்தி: ‛‛ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியம்,'' என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராமாயண கருத்தரங்கை துவக்கி வைத்து பேசியதாவது: ராமாயணத்தை, கலை மற்றும் கலாசாரம் மூலம் சாதாரண மக்களிடம் கொண்டு செல்ல ராமாயண கருத்தரங்கை ஏற்பாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன். ராமாயணத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது முக்கியமானது. அதில் உள்ள தத்துவங்களுடன் ராமாயணம், நமது வாழ்க்கையை வழிநடத்த தேவையான அனைத்து நடத்தை விதிமுறைகளை வழங்குகிறது.


latest tamil news



ஆன்மிக மற்றும் கலாசார சுற்றுலாவை ஊக்குவிக்க இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியம். ராம ராஜ்ஜியத்தில் பாகுபாடு கிடையாது. தண்டனை சட்டமும் கிடையாது. ராம் இருக்கும் இடத்தில் தான் அயோத்தி உள்ளது. ராமர் இந்த நகரத்தில் வசிக்கிறார். எனவே தான், இந்த இடம் உண்மையில் அயோத்தி. இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HONDA -  ( Posted via: Dinamalar Android App )
30-ஆக-202109:31:36 IST Report Abuse
HONDA அதை வச்சு தானே நீங்களும் உங்க கட்சியும் உயிர் வாழறீங்க
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
30-ஆக-202108:45:05 IST Report Abuse
arudra1951 ராமாயணம் இல்லாத இடம் இந்தியாவில் உண்டா ?வாய்க்கு வந்த படி பேசலாமா ?ஒரு நியாயம் வேண்டுமல்லவா
Rate this:
Cancel
30-ஆக-202105:18:22 IST Report Abuse
முருகன் கெரோனா பாதிப்பால் நாட்டில் வேலைவாய்ப்பு இன்மை பெருகி மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது. அவர்கள் வாழ்வாதாரத்தை காக்க ஏதாவது செய்ய வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X