கர்நாடகா அரசு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா அரசு பஸ்சில் குட்கா கடத்தியவர் கைது

Added : ஆக 29, 2021
Share
பண்ணாரி: கர்நாடக பஸ்சில் குட்கா கடத்தியவரை, பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிலிருந்து கோவைக்கு வந்த கர்நாடகா அரசு பஸ்சில், சோதனை நடத்தினர். ஒரு இருக்கைக்கு அடியில் ஹான்ஸ், குட்கா மூட்டைகள் சிக்கின. கடத்தி வந்த திருப்பூர்,

பண்ணாரி: கர்நாடக பஸ்சில் குட்கா கடத்தியவரை, பண்ணாரி சோதனைச்சாவடியில் போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச்சாவடியில், போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெங்களூருவிலிருந்து கோவைக்கு வந்த கர்நாடகா அரசு பஸ்சில், சோதனை நடத்தினர். ஒரு இருக்கைக்கு அடியில் ஹான்ஸ், குட்கா மூட்டைகள் சிக்கின. கடத்தி வந்த திருப்பூர், பாப்பநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த பழனிவேல், 50, என்பவரை கைது செய்தனர். பொருட்களை பறிமுதல் செய்து, சத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X