சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காயங்களுடன் டிரைவர் சடலம் மீட்பு; தாளவாடி அருகே பரபரப்பு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
தாளவாடி: தாளவாடி அருகே, காயங்களுடன் கிடந்த டிரைவர் சடலத்தை போலீசார் மீட்டனர். கொலையா, தற்கொலையா என விசாரணை நடக்கிறது. தாளவாடியில் தலமலை சாலை, தொட்டாபுரம் டைகர் பார்ம் அருகில், நேற்று காலை உடலில் காயங்களுடன், 40 வயது ஆண் சடலம் கிடந்தது. ஆசனூர் போலீசார் சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரை சேர்ந்த

தாளவாடி: தாளவாடி அருகே, காயங்களுடன் கிடந்த டிரைவர் சடலத்தை போலீசார் மீட்டனர். கொலையா, தற்கொலையா என விசாரணை நடக்கிறது. தாளவாடியில் தலமலை சாலை, தொட்டாபுரம் டைகர் பார்ம் அருகில், நேற்று காலை உடலில் காயங்களுடன், 40 வயது ஆண் சடலம் கிடந்தது. ஆசனூர் போலீசார் சடலத்தை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் விசாரணையில், தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரை சேர்ந்த சித்தப்பா, 40, என்பது தெரிய வந்தது. நெய்தாலபுரத்தில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் கொண்ட அவர், வீட்டில் அடிக்கடி தகராறு செய்வார். மூன்று நாட்களுக்கு முன் சண்டையிட்டு, வீட்டில் இருந்து வந்தவர், அதன் பிறகு வீடு திரும்ப வில்லை. இந்நிலையில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். அவரது மனைவி ராஜி புகாரின்படி, கொலையா, தற்கொலையா என, ஆசனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X