பொது செய்தி

தமிழ்நாடு

30 பேருக்கு 'டெங்கு': கரட்டூர் மக்கள் கலக்கம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
இடைப்பாடி: கரட்டூரில், 30க்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி ஊராட்சியில் உள்ள கரட்டூரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, இரு வாரத்தில், 30க்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இடைப்பாடி, சங்ககிரி அரசு

இடைப்பாடி: கரட்டூரில், 30க்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


சேலம் மாவட்டம், கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி ஊராட்சியில் உள்ள கரட்டூரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். அங்கு, இரு வாரத்தில், 30க்கும் மேற்பட்டோர், 'டெங்கு' காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், இடைப்பாடி, சங்ககிரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டும் குணமாகாததால், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மக்கள் கூறுகையில், 'வீடுதோறும் மருந்து அடிப்பது போன்ற அடிப்படை வசதிகளை கூட ஊராட்சி நிர்வாகம் செய்யவில்லை. மருத்துவ குழுவும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் முன், சுகாதாரத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

இதுகுறித்து, கொங்கணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மகேந்திரன் கூறியதாவது: கரட்டூரில், ஏழு பேர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர், சேலம் அரசு மருத்துவமனை, மற்றொருவர், திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் உள்ளனர். 'டெங்கு' காய்ச்சல் என எந்த தகவலும் இல்லை. இருப்பினும், இன்று(நேற்று) நடமாடும் மருத்துவக்குழுவினர், அப்பகுதி மக்களுக்கு, நிலவேம்பு கஷாயம், மாத்திரை வழங்கினர். ஊராட்சி மூலம் அப்பகுதியில் மருந்து தெளித்து, யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் சிகிச்சை அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X