பாராலிம்பிக்: இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 பதக்கம்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்றார். மேலும் பாராலிம்பிக் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெண்கலப் பத்தகம் வென்ற இந்திய வீரர் வினோத் குமாரின் வெற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.ஜப்பானில், டோக்கியோ
TokyoParalympics, Paralympics, Nishaad kumar

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி வென்றார். மேலும் பாராலிம்பிக் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத் குமார் வெண்கல பதக்கம் வென்றார். இதனிடையே, டோக்கியோ பாராலிம்பிக்கில் வட்டு எறிதலில் வெண்கலப் பத்தகம் வென்ற இந்திய வீரர் வினோத் குமாரின் வெற்றி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில், டோக்கியோ பாராலிம்பிக் நடக்கிறது. இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் 'டி 46-47' பிரிவு பைனலில் இந்தியா சார்பில் நிஷாத் குமார் ('டி-47'), ராம் பால் ('டி-47') பங்கேற்றனர். இதில், ராம் பால், அதிகபட்சமாக 1.94 மீ., தாண்டி 5வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் நிஷாத் குமார், அதிகபட்சமாக 2.06 மீ., உயரம் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை தட்டிச் சென்றார். அமெரிக்காவின் ரோடெரிக் டவுன்சென்ட் ('டி-46'), அதிகபட்சமாக 2.15 மீ., தாண்டி உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை கைப்பற்றினார். மற்றொரு அமெரிக்க வீரர் தல்லாஸ் வைஸ் ('டி-46') 2.06 மீ., தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.


latest tamil news


இதன்மூலம் டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு 2வது பதக்கம் கிடைத்தது. டேபிள் டென்னிசில் இந்திய வீராங்கனை பவினா வெள்ளி வென்றார். தவிர, பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு 4வது பதக்கம் கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்திய வீரர்களான கிரிஷா (வெள்ளி, 2012, 'எப்-42' பிரிவு), மாரியப்பன் (தங்கம், 2016, 'எப்-42' பிரிவு), வருண் சிங் (வெண்கலம், 2016, 'எப்-42' பிரிவு) பதக்கம் வென்றிருந்தனர்.


3வது பதக்கம்



டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இன்று ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர் வினோத் குமார் இறுதிச்சுற்றில் 19.91 மீட்டர் தூரம் வட்டு எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். அத்துடன் ஆசிய சாதனையும் படைத்துள்ளார். இப்போட்டியில், போலந்து வீரர் கோஸ்விச் (20.02 மீட்டர்) தங்கப்பதக்கமும், குரோஷிய வீரர் வெலிமிர் சாண்டர் (19.98 மீட்டர்) வெள்ளிப் பதக்கமும் வென்றனர். வினோத் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.



பாராலிம்பிக்கில் இதுவரை இந்தியாவுக்கு 4 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என, 15 பதக்கம் கிடைத்துள்ளன.


தலைவர்கள் வாழ்த்து



பிரதமர் மோடி:


டோக்கியோவில் இருந்து மகிழ்ச்சி தரும் நிறைய செய்திகள் வருகின்றன. உயரம் தாண்டுதலில் நிஷாத்குமார் வெள்ளி வென்றது பெருமையாக உள்ளது. அவர் அதிக திறமையும், விடா முயற்சியையும் கொண்ட சிறந்த வீரர்.


latest tamil news




காங்கிரஸ் எம்.பி., ராகுல்

தேசிய விளையாட்டு தினத்தில் இந்தியாவிற்கு மற்றொரு வெள்ளிப்பதக்கம் கிடைத்து உள்ளது. சிறந்த திறமையை வெளிப்படுத்திய நிஷாத்குமாருக்கு பாராட்டுகள். நிஷாத்குமார் நாட்டை பெருமையடைய வைத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Kumar - Salem,இந்தியா
29-ஆக-202118:39:03 IST Report Abuse
Suresh Kumar வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..
Rate this:
Cancel
sankar - ghala,ஓமன்
29-ஆக-202118:23:32 IST Report Abuse
sankar வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X