பொது செய்தி

தமிழ்நாடு

மானியத்தில் நெல் விதை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
கொளத்தூர்: கொளத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: கொளத்தூர், நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் ஆண்டுதோறும், 2,125 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தவிர கொளத்தூர் ஒன்றியத்தில், இதர ஊராட்சிகளில் கிணற்று பாசனம் மூலம், 875 ஏக்கர் என, 3,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து, 5,400 டன் அரிசி விளைவிக்கப்படுகிறது.

கொளத்தூர்: கொளத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: கொளத்தூர், நவப்பட்டி, கோல்நாயக்கன்பட்டி ஊராட்சிகளில், மேட்டூர் கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் ஆண்டுதோறும், 2,125 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தவிர கொளத்தூர் ஒன்றியத்தில், இதர ஊராட்சிகளில் கிணற்று பாசனம் மூலம், 875 ஏக்கர் என, 3,000 ஏக்கரில் நெல் சாகுபடி செய்து, 5,400 டன் அரிசி விளைவிக்கப்படுகிறது. தற்போது நெல் உற்பத்தியை அதிகரிக்க, தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் தரச்சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் விதை, நுண்ணுயிரி உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகின்றன. இதில், புது ரக நெல் விதைகள் ஒரு கிலோ மானியத்தில், 20 ரூபாய், விதை கிராம திட்டத்தில், 17 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மண் வளத்தை பெருக்கி விளைச்சலை அதிகப்படுத்த உயிரி உரங்கள், 50 சதவீத மானியத்திலும், இயந்திரத்தை பயன்படுத்தி நெல் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ?ஹக்டேருக்கு, 6,000 ரூபாய் மானியம், நெல் நுண்ணூட்ட உரத்துக்கு, 500 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X