பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லூரியில் 1,225 மரக்கன்று நடல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
ஆத்தூர்: அரசு கல்லூரியில், 'அடர்வனம்' அமைக்கும் திட்டத்தில், 1,225 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆத்தூர் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், ராசி விதை நிறுவனம், பசுமை மையம், ரோட்டரி சங்கம், கல்லூரி சார்பில், 5,000 சதுர அடியில், 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று, ராசி விதைகள் சேர்மன் ராமசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட வன

ஆத்தூர்: அரசு கல்லூரியில், 'அடர்வனம்' அமைக்கும் திட்டத்தில், 1,225 மரக்கன்றுகள் நடப்பட்டன. ஆத்தூர் அருகே, வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில், ராசி விதை நிறுவனம், பசுமை மையம், ரோட்டரி சங்கம், கல்லூரி சார்பில், 5,000 சதுர அடியில், 'மியாவாக்கி' எனும் அடர்வனம் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று, ராசி விதைகள் சேர்மன் ராமசாமி, ஓய்வு பெற்ற மாவட்ட வன அலுவலர் மணி, ரோட்டரி சங்க நிர்வாகிகள், வேம்பு, புங்கன், மருதம், நாவல், மூங்கில், வாகை உள்பட 25 வகை மரக்கன்று என, 1,225 மரக்கன்றுகளை நட்டனர்.

இதுகுறித்து, மணி கூறுகையில், ''இன்று(நேற்று), 1,225 மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த மரங்கள் வளர்ந்தால், பறவைகளின் வாழ்விடமாக மாறும். காலியாக உள்ள இடங்களை கண்டறிந்து அடர்வனம் அமைத்து வருகிறோம். ஆத்தூரில் நடப்பாண்டில் மட்டும், 8,228 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X