பொது செய்தி

இந்தியா

கிராமப்புற மாணவர்களின் கல்வி 'ஆன்லைன்: தொண்டு நிறுவனம் ஆய்வு

Added : ஆக 29, 2021
Share
Advertisement
மைசூரு:மைசூரு கிராமப்புற அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளில், 15 சதவீத மாணவர்கள் மட்டுமே செயல்பாட்டுடன் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.துவக்கக் கல்வி மாணவர்களின் உடல்நலனை கருதி, சில நாட்களுக்கு ஆன்லைன் கல்வி முறையை தொடருமாறு அரசு அறிவித்துள்ளது. துவக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து இம்மாத இறுதியில் கூட்டம் நடத்துவதற்கும் மாநில அரசு ஏற்பாடு

மைசூரு:மைசூரு கிராமப்புற அரசு பள்ளிகளின் ஆன்லைன் வகுப்புகளில், 15 சதவீத மாணவர்கள் மட்டுமே செயல்பாட்டுடன் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

துவக்கக் கல்வி மாணவர்களின் உடல்நலனை கருதி, சில நாட்களுக்கு ஆன்லைன் கல்வி முறையை தொடருமாறு அரசு அறிவித்துள்ளது. துவக்கப்பள்ளிகள் திறப்பது குறித்து இம்மாத இறுதியில் கூட்டம் நடத்துவதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.தற்போது, உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், துவக்க நிலை மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறையில் கவன சிதறலுக்கு ஆளாவதுடன், மிக குறைந்த சதவீதத்தினர் மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகவும் தன்னார்வல தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மைசூரைச் சேர்ந்த 'கிராஸ்ரூட்' எனப்படும் பொதுநலம் சார்ந்த தொண்டு நிறுவனம், ஆன்லைன் வகுப்புகளில் கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களின் ஈடுபாட்டை கணக்கிடுவதற்கு ஆய்வு நடத்தியது.மைசூரில் உள்ள பல்வேறு கிராமங்களில் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவர்களின் செயல்பாட்டை நிறுவனத்தினர் கண்காணித்துள்ளனர். இதில், 15 சதவீத மாணவர்கள் தான் வகுப்புகளில் ஈடுபாடு காண்பித்துள்ளனர்.

தொண்டு நிறுவனத்தினர் கூறியதாவது:மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளின் போது, 30 சதவீதம் பேர் தொலைக்காட்சி பார்க்கின்றனர். 20 சதவீதம் பேர் வகுப்புகளில் பதிவு செய்து விட்டு, வேறு சில செயல்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.இன்னும் சில மாணவர்கள், வகுப்புகளுக்கு பதிவு கூட செய்வதில்லை. இந்நிலை தொடர்ந்தால், மாணவர்களுக்கான அடிப்படை கல்வி பாதிக்கப்படும்.இதனால் அடுத்தடுத்த வகுப்புகளுக்கு செல்லும் போது, மாணவர்களுக்கு கல்வி சுமையாக மாறிவிடும். எனவே தான் பெற்றோர், பள்ளிகளை திறக்க ஆர்வம் காட்டுகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X