பொது செய்தி

இந்தியா

புதிய மகளிர் கல்லுாரி பெங்களூரில் துவக்கம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:நடப்பு கல்வியாண்டு முதல் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சார்பில், மாணவியருக்கான சிறப்பு கல்லுாரி துவக்கப்படுகிறது.பெங்களூரில் மல்லேஸ்வரம் பி.யு.சி., கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில், மாணவியருக்கான கலைக்கல்லுாரி இயங்க உள்ளது.பெங்களூரு பல்கலைக்கழக துணை வேந்தர் லிங்கராஜா காந்தி கூறியதாவது:புதிதாக துவக்கப்படும் மகளிர் கல்லுாரியில்,

பெங்களூரு:நடப்பு கல்வியாண்டு முதல் பெங்களூரு பல்கலைக்கழகத்தின் சார்பில், மாணவியருக்கான சிறப்பு கல்லுாரி துவக்கப்படுகிறது.

பெங்களூரில் மல்லேஸ்வரம் பி.யு.சி., கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடத்தில், மாணவியருக்கான கலைக்கல்லுாரி இயங்க உள்ளது.பெங்களூரு பல்கலைக்கழக துணை வேந்தர் லிங்கராஜா காந்தி கூறியதாவது:புதிதாக துவக்கப்படும் மகளிர் கல்லுாரியில், புதிய கல்விக்கொள்கை செயல்படுத்தப்படும். இதன் அடிப்படையில் பாடப்பிரிவுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பட்டதாரி படிப்புகள் தவிர தொழிற்கல்வி, திறன்மேம்பாட்டு பயிற்சிகள், சான்றிதழ் படிப்புகளும் வழங்கப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் சார்பில் விரைவில் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்படும். சிறப்பு கல்லுாரிகளில் சேர்க்கை பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X