பொது செய்தி

இந்தியா

நடுநிலை பள்ளிகள் திறப்பு செப்டம்பரில் முடிவாகும்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:'நடுநிலை பள்ளிகளை திறப்பதை செப்டம்பரில் முடிவு செய்யலாம்' என அரசுக்கு தொழில்நுட்ப குழு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.கர்நாடகாவில் தற்போது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.இந்நிலையில், பள்ளி நிர்வாகங்களின் கோரிக்கையால்,

பெங்களூரு:'நடுநிலை பள்ளிகளை திறப்பதை செப்டம்பரில் முடிவு செய்யலாம்' என அரசுக்கு தொழில்நுட்ப குழு நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கர்நாடகாவில் தற்போது உயர்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் எனவும் அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.இந்நிலையில், பள்ளி நிர்வாகங்களின் கோரிக்கையால், அடுத்தகட்டமாக செப்டம்பர் இறுதிக்குள் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக நடக்கிறது.

ஆனால், மேலும் சில நாட்களுக்கு மாநிலத்தின் கொரோனா பாதிப்புகளை கண்காணித்த பின், நடுநிலை வகுப்புகளை துவங்குவது குறித்து முடிவு செய்யலாம் என மாநில தொழில் நுட்ப குழுவினர், அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

தொழில் நுட்ப குழு நிபுணர்கள் கூறியதாவது:தற்போது பாதிப்பு குறைந்திருந்தாலும், செப்டம்பரில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், அதுவரை காத்திருந்து, பாதிப்பின் தாக்கம்; மாணவர்களின் உடல்நலத்தை கண்காணித்து பள்ளிகள் திறப்பதை முடிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வகுப்புகள் நடக்கும் பள்ளிகளில் மாணவர்களை சிறிய சிறிய குழுக்களாக தனிமைப் படுத்தி வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யலாம்.இதன் மூலம் பாதிப்பு ஏற்பட்டாலும், மொத்த வகுப்பு மாணவர்களையும் தனிமைப்படுத்தாமல் அந்த குழுவினரை மட்டுமே தனிமைப் படுத்தினால் போதுமானது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பதிவாகும் கொரோனா பாதிப்பில் 40 சதவீதம், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்கின்றனர். ஆனால் மருத்துவமனை சிகிச்சை பெறும் அளவுக்கு மோசமாவதில்லை. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றினாலே, நோய் பாதிப்பை குறைக்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X