சீக்ரெட் சிங்காரம்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
'மாஜி' முதல்வருடன் மினிஸ்டர் மேடம்எம்.எல்.ஏ., மாநில மந்திரி, எம்.பி., மத்திய மந்திரி என பதவி மேல் பதவி கிடைக்க செய்த 'மாஜி' முதல்வரை, சென்ட்ரல் மினிஸ்டரான மேடம், இது நாள் வரைக்கும் சந்திக்கல என்ற பேச்சு இருந்து வந்தது.இந்நிலையில் சனிக்கிழமை, ஷிவமொகா சென்று, அரசியல் குருநாதரான மாஜி சி.எம்.,மை அரை மணி நேரம் தனியாக சந்தித்து பேசினார். லேட்டா சந்திச்ச மேடம், சந்தோஷமாகவே

'மாஜி' முதல்வருடன் மினிஸ்டர் மேடம்
எம்.எல்.ஏ., மாநில மந்திரி, எம்.பி., மத்திய மந்திரி என பதவி மேல் பதவி கிடைக்க செய்த 'மாஜி' முதல்வரை, சென்ட்ரல் மினிஸ்டரான மேடம், இது நாள் வரைக்கும் சந்திக்கல என்ற பேச்சு இருந்து வந்தது.இந்நிலையில் சனிக்கிழமை, ஷிவமொகா சென்று, அரசியல் குருநாதரான மாஜி சி.எம்.,மை அரை மணி நேரம் தனியாக சந்தித்து பேசினார். லேட்டா சந்திச்ச மேடம், சந்தோஷமாகவே வெளியே வந்தார். 'டாட்டா' காட்டி போலீஸ் பாதுகாப்புடன் காரில் பறந்தார். எல்லாமே அரசியல் தானாம். இனி சென்ட்ரல் மினிஸ்டர் மேடமுக்கும், 'மாஜி' முதல்வருக்கும் ஏதோ லடாய் என்ற பேச்சுக்கு இடம் இல்லாமல் போச்சு.

*வடக்கில் வசந்தம் கிடைக்குமா?

புல்லுக்கட்டு மாஜி சி.எம்., பார்வை, கர்நாடகாவின் வட கர்நாடகா பக்கமா வீசுது. கடந்த வாரம் மூன்று நாட்கள் தங்கி, அங்கு காற்று வாங்கி வந்தார். அடுத்த சட்டசபை தேர்தலில் வட மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை இழுக்க, இப்போதே புள்ளி வைத்து விட்டாராம். வடக்கில் வசந்தம் வர போகுதாம். ஆனால், தென் மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கை விட்டு போவதை தடுக்கலையேன்னு மைசூரு, கோலாரு காரங்க வருத்தப்படாறாங்க.

*தலை காட்டாத மந்திரிகள்!

மந்திரி பதவி வேணும்னு பலரு, பலவிதமான முயற்சிகளை செஞ்சாங்க. சிலருக்கு வாய்ப்பு கிடைச்சது. கிடைக்காத சிலரு, சோர்ந்து கிடக்குறாங்க.அப்படி மந்திரி பதவி கிடைச்சவங்களில் ஜவுளி, சர்க்கரை துறை மந்திரி; சுரங்கத் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, மாற்றுத் திறனாளிகள், முதியோர் நலத்துறையோட மந்திரிங்க விதான் சவுதா பக்கமே தலைகாட்டால.இதுக்கு தானா இவர்களுக்கு மந்திரி பதவி வழங்கினாங்க. .. மந்திரி பதவி, காரு, பங்களா கிடைச்சா போதுமா. அலுவலகத்தில் துறை சம்பந்தமா பணியாற்ற, வரக்கூடாதான்னு விதான் சவுதா வட்டாரத்தில் பேசிக்கிறாங்க.

*அசம்பிளிக்கு தயாராகும் முனி.,

ஏழு முறை தொடர்ச்சியா செங்கோட்டைக்கு போனவரை அவரோட உட்கட்சி எதிரிங்க தடுத்து நிறுத்தி, அடக்கி வெச்சிட்டாங்க. இவரோட பவர் மெல்ல சரிய தொடங்கி இருக்கு. கோளாறு நிறைந்த தொகுதியாக, கை காரங்க மாற்றிட்டாங்க. ஆனாலும், தன்னோட செல்வாக்கை உயர்த்த, கட்சி பணியில் ஆர்வம் காட்டி வராரு. கோலார் மாவட்ட கட்சி அலுவலகத்தில் அடிக்கடி தொண்டர்களை சந்திக்கிறாரு. ஆனாலும் கட்சி அதிகாரம், சீனிவாசப்பூர் அசம்பிளிக்காரரிடம் இருப்பதாகவே தெரிகிறது. கோலார் அல்லது முல்பாகல் சட்டசபைத் தொகுதியில் 'மாஜி' செங்கோட்டைக்காரர் போட்டியிட தயாராகி வர்ராறாம்!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X