பொது செய்தி

இந்தியா

'கூகுள் மேப்' நகரங்களின் பெயர்களில் தவறுகள் : கன்னட மேம்பாட்டுகழகம் தகவல்

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:கர்நாடகாவில் உள்ள சில பகுதிகளின் பெயர்கள், 'கூகுள்' வரைபட தளத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கன்னட மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.கர்நாடக அரசின் சார்பில். கன்னட மேம்பாட்டு கழகம், மாநிலத்தில் மொழி சார்ந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.இதன் தலைவர் நாகபரணா, கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில்

பெங்களூரு:கர்நாடகாவில் உள்ள சில பகுதிகளின் பெயர்கள், 'கூகுள்' வரைபட தளத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கன்னட மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.

கர்நாடக அரசின் சார்பில். கன்னட மேம்பாட்டு கழகம், மாநிலத்தில் மொழி சார்ந்த செயல்பாடுகளை கண்காணிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் உதவுகிறது.இதன் தலைவர் நாகபரணா, கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

கர்நாடகாவில் உள்ள பல கிராமங்கள் மற்றும் நகரங்களின் பெயர்கள், கூகுள் வரைபடத்தில் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளன.இதனால், கர்நாடகாவில் புதிதாக ஒரு இடத்துக்கு செல்வோர் தவறாக வழிகாட்டப்படுகின்றனர். தவறாக இருக்கும் இடம் பெயர்களை திருத்த வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.உதாரணமாக, 'ஒயிட்பீல்ட்' என்பதை 'விடிபிஎல்ட்' என கூகுள் காண்பிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X