அரசியல்வாதிகளின் அரசு திட்ட விளம்பரங்களில் தடை

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:'அரசியல் பிரதிநிதிகளின் போட்டோக்களை வைத்து, அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ள பலகைகளை அகற்ற வேண்டும்' என, அதிகாரிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர், கவர்னர், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் புகைப்படங்களை தவிர, பிறர் படங்களை அரசு

பெங்களூரு:'அரசியல் பிரதிநிதிகளின் போட்டோக்களை வைத்து, அரசு திட்டங்களை விளம்பரப்படுத்தியுள்ள பலகைகளை அகற்ற வேண்டும்' என, அதிகாரிகளுக்கு நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர், கவர்னர், மகாத்மா காந்தி உள்ளிட்டோர் புகைப்படங்களை தவிர, பிறர் படங்களை அரசு விளம்பரங்களில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மாநில நகர்புற வளர்ச்சித்துறை சார்பில், அனைத்து உள்ளாட்சி துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.

சுற்றறறிக்கையில் கூறியிருப்பதாவது:நீதிமன்றம் உத்தரவை பின்பற்றி, வேறு எந்த அரசியல் பிரதிநிதிகளின் புகைப்படங்களை வைத்தும் அரசு திட்டங்கள், மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்களுக்கான விளம்பர பலகைகள் வைக்கக்கூடாது.அனைத்து மாவட்டத்திலும், விதிமுறை பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.

விதிமுறை மீறி வைக்கப்பட்டிருக்கும் விளம்பர பலகைகளை அகற்றுவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமுறை மீறுவோர் மீது போலீசில் புகார் செய்து, வழக்கு பதிவு செய்வதற்கும் அறிவுறுத்தப்படுகிறது.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X