பொது செய்தி

இந்தியா

'வெட்டி வேரு வாசம் லால்பாகிலும் வீசும்'

Added : ஆக 29, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரு லால்பாக் பூங்காவில் தன்னாவலர்கள் ஒருங்கிணைந்து, நீர்நிலைகளின் அருகே, வெட்டிவேர் நடவு செய்துள்ளனர்.பெங்களூரின் பசுமை அடையாளமாக இருக்கும் இடங்களில் லால்பாக் பூங்காவும் ஒன்று. பார்வையாளர்களை கவருவதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மாநகராட்சியின் சார்பில், இங்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக,
 'வெட்டி வேரு வாசம் லால்பாகிலும் வீசும்'

பெங்களூரு:பெங்களூரு லால்பாக் பூங்காவில் தன்னாவலர்கள் ஒருங்கிணைந்து, நீர்நிலைகளின் அருகே, வெட்டிவேர் நடவு செய்துள்ளனர்.

பெங்களூரின் பசுமை அடையாளமாக இருக்கும் இடங்களில் லால்பாக் பூங்காவும் ஒன்று. பார்வையாளர்களை கவருவதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் மாநகராட்சியின் சார்பில், இங்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதன் தொடர்ச்சியாக, தன்னார்வலர்கள் இணைந்து நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான முயற்சியாக, வெட்டிவேர் நடவு செய்துள்ளனர்.

தோட்டக்கலைத்துறையின் வழிகாட்டுதல் படி, பூங்காவில் உள்ள ரோஸ் கார்டன் குளம் உட்பட நீர்நிலைகளை சுற்றிலும் 5,000 வெட்டி வேர்களை நட்டனர்.இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஜெகதீஷ் கூறியதாவது:வழக்கமான மரக்கன்று நடுவதால் மழை பொழிவை அதிகரிக்க செய்து, நிலத்தடி நீரை மேம்படுத்த முடியும்.

தற்போது இருக்கும் நீர்நிலைகளை பாதுகாப்பதற்கு, வெட்டிவேர்களை நடவு செய்திருக்கிறோம். வெட்டிவேர்கள் நடவு செய்வது, மண்ணின் தரத்தை மேம்படுத்தி மண் அரிப்பை கட்டுபடுத்துகிறது. ஆழமாக வளரும்போது, மண்ணின் தன்மையை பலப்படுத்துகிறது; நீரை சுத்திகரிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X