பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் குவியும் அந்நிய நேரடி முதலீடுகள்: கர்நாடகா முதலிடம்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புது டில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 1.65 லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈர்க்கப்பட்ட 87 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது இது 90% அதிகம் ஆகும்.வெளிநாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதில் ஆட்டோமொபைல் முக்கிய துறையாக உள்ளது. நிதியாண்டின் முதல்

புது டில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 1.65 லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈர்க்கப்பட்ட 87 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது இது 90% அதிகம் ஆகும்.



latest tamil news



வெளிநாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதில் ஆட்டோமொபைல் முக்கிய துறையாக உள்ளது. நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் வந்த முதலீடுகளில் 27% அத்துறைக்கு சென்றுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை உள்ளது. 17% முதலீடுகள் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் சேவைத் துறை உள்ளது. 11% முதலீடுகளை இந்திய சேவைத் துறை ஈர்த்துள்ளது.
2021-22 நிதியாண்டில் ஜூன் வரை வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 48 சதவிகிதம் கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் கீழ், 88% அந்நிய நேரடி முதலீடு கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அடுத்ததாக மஹாராஷ்டிர மாநிலம் 23% பங்களிப்பு செய்துள்ளது. 11% பங்களிப்பை பெற்று மூன்றாவது இடத்தில் டில்லி உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிவாய்ப்புகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான முன்னெடுப்புகள் போன்ற அரசின் நடவடிக்கைகள் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-ஆக-202114:48:01 IST Report Abuse
ஆரூர் ரங் ஸ்டெர்லைட் மாதிரி மூடுவிழா போராட்டம் நடத்தினால் எந்த அன்னிய முதலீடு வரும்,,? 🤧வாய்ப்பே இல்லை..தி.மு.க எம்பி ஜெகத கூட இலங்கை சிங்கள பகுதியில்தான் 27000 கோடி முதலீடு செய்தார்? டாஸ்மாக் சர்க்கில் சம்பாதிச்ச பணமும் அன்னிய நாட்டுக்குதான் போகிறது
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
30-ஆக-202112:11:55 IST Report Abuse
vpurushothaman தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்த்ததாக வெறும் சத்தம்தான். மொத்தமாக வேறு மாநிலங்களுக்கே செல்லுகின்றன. 'கமிஷனுக்கு' பயப்படுகிறார்களே? சலுகைகள் என்ற பெயரால் என்னென்னமோ நடக்கிறதாமே? மெய்யாலுமா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
30-ஆக-202109:43:36 IST Report Abuse
M  Ramachandran ஒன்றிய அரசு என்று திரிந்து கொண்டிருந்தாள் அயல் நட்டு முதலீட்டார்களை ஈர்க்க முடியாது அவர்கள் ஒதுங்கு வார்கள்.ஏன் கட்சி காரர்கள் பல லட்சம் கோடி அமுக்கி வைத்திருக்கிறார்களே அதை கொஞ்சம் தமிழ் நாட்டு பக்கம் திருப்ப வேண்டியது தானே. சீனாக்காரனுடன் இலங்கையில் கொட்டுவதேன்.இப்பொஅ சீனாக்காரனும் ராஜ பக்தேயும் கபலீக்காரம் செய்ய போகிறார்களே.அவ்வளவு தமிழ் நாட்டின் மேல் மதிப்பு வைய்த்திருக்கிறார்கள். சுருட்டுவதிலுள்ள ஆர்வம் முதலீட்டில் இல்லை. வரும் தொழிலதிபர்களை மிரட்டுவதிலும் ஒத்துழைப்பை கொடுப்பதில் சுணக்கம். தேவையான இட வசதி மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி முக்கியம் செய்து கொடுப்பதிலும் ஊழலோ.சமீபத்தில் கூட கேராளா ஆயத்தா ஆடை தயாரிப்பாளர் நேரிடையாக ஊடகங்கள் மூலம் கேரள கொடுத்த குடைச்சல் காரணமாக வேறு மாநிலத்கிற்கு மாறப்போவதாக கூறியிருந்தார். ஆந்திர அரசு முந்திக்கொண்டு அவர்கள் மாநிலத்தில் வசதிகள் செய்து கொடுத்து திருப்பிவிட்டார்கள். இஙகு காழ்ப்புணர்ச்சியை காட்டவும் எதிர்க்கட்சிகளுக்கு அவர்கள் மேல் கேஸுகள் போடவும் தான் முனைப்பு காட்டுகிறார்கள்.தமிழக முன்னேற்றம் நிச்சயம் இவர்கள் ஆட்சில் இருக்காது . வெறும் விளம்பர பிரியர்கள் .கர்நாடகாவில் ஆட்சிகள் மாறினாலும் அவர்கள் மாநிலத்திற்கு தேவையானதை முனைப்புடன் செய்கிறார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X