இந்தியாவில் குவியும் அந்நிய நேரடி முதலீடுகள்: கர்நாடகா முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் குவியும் அந்நிய நேரடி முதலீடுகள்: கர்நாடகா முதலிடம்

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (5)
Share
புது டில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 1.65 லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈர்க்கப்பட்ட 87 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது இது 90% அதிகம் ஆகும்.வெளிநாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதில் ஆட்டோமொபைல் முக்கிய துறையாக உள்ளது. நிதியாண்டின் முதல்

புது டில்லி: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் இந்தியா 1.65 லட்சம் கோடி ரூபாய் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ஈர்க்கப்பட்ட 87 ஆயிரம் கோடி ரூபாயுடன் ஒப்பிடும் போது இது 90% அதிகம் ஆகும்.



latest tamil news



வெளிநாடு முதலீடுகளை ஈர்த்திருப்பதில் ஆட்டோமொபைல் முக்கிய துறையாக உள்ளது. நிதியாண்டின் முதல் மூன்று மாதத்தில் வந்த முதலீடுகளில் 27% அத்துறைக்கு சென்றுள்ளன. அதற்கு அடுத்த இடத்தில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள் துறை உள்ளது. 17% முதலீடுகள் அத்துறை சார்ந்த நிறுவனங்கள் பெற்றுள்ளன. மூன்றாவது இடத்தில் சேவைத் துறை உள்ளது. 11% முதலீடுகளை இந்திய சேவைத் துறை ஈர்த்துள்ளது.
2021-22 நிதியாண்டில் ஜூன் வரை வந்த மொத்த அந்நிய நேரடி முதலீட்டில் 48 சதவிகிதம் கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆட்டோமொபைல் துறையின் கீழ், 88% அந்நிய நேரடி முதலீடு கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. அடுத்ததாக மஹாராஷ்டிர மாநிலம் 23% பங்களிப்பு செய்துள்ளது. 11% பங்களிப்பை பெற்று மூன்றாவது இடத்தில் டில்லி உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், அந்நிய நேரடி முதலீட்டுக்கான கொள்கை சீர்திருத்தங்கள், முதலீட்டு வசதிவாய்ப்புகள் மற்றும் எளிதாக வணிகம் செய்வதற்கான முன்னெடுப்புகள் போன்ற அரசின் நடவடிக்கைகள் முதலீட்டை அதிகப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X