பொது செய்தி

இந்தியா

ஒளிமயமான எதிர்காலம்!: இளைஞர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு; 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு ஊக்கம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி:''மிகச் சிறிய நகரங்களிலும் 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சிறிய நிறுவனங்களை துவங்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இதன் வாயிலாக நம் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அறிகுறி தென்படத் துவங்கியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலி
ஒளிமயமான ,எதிர்காலம்!, இளைஞர்களுக்கு,பிரதமர், மோடி பாராட்டு

புதுடில்லி:''மிகச் சிறிய நகரங்களிலும் 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சிறிய நிறுவனங்களை துவங்குவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட துவங்கியுள்ளனர். இதன் வாயிலாக நம் நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அறிகுறி தென்படத் துவங்கியுள்ளது,'' என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். 'மன் கீ பாத்' எனப்படும் 'மனதில் குரல்' என்ற இந்த நிகழ்ச்சியின் 80வது ஒலிபரப்பில் அவர் பேசியதாவது:மேஜர் தியான் சந்தின் பிறந்த நாளான ஆக., 29ம் தேதியை ஆண்டுதோறும் விளையாட்டு தினமாக கொண்டாடி வருகிறோம்.


மரியாதை

இன்றைய தினம் நம் இளைஞர்கள் மத்தியில் விளையாட்டு துறை மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது. இதுவே மேஜர் தியான் சந்துக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதை.ஒலிம்பிக் போட்டிகளில் நாம் எத்தனை பதக்கங்கள் வென்றோம் என்பது முக்கியமல்ல. ஹாக்கியில் பதக்கம் வெல்லாமல் அந்த வெற்றி நிறைவு பெறுவதில்லை. 40 ஆண்டுகளுக்கு பின் ஹாக்கியில் பதக்கம் வென்றுள்ளோம். நம் கனவு நிறைவேறி உள்ளது.

ஒலிம்பிக் போட்டிகளில் நம் வீரர்கள் இந்த முறை அழுத்தமான தடத்தைப் பதித்துள்ளனர். உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் சாதனை மிகச் சிறியதாக இருக்கலாம். ஆனால் நம் நம்பிக்கைக்கு வலுவூட்டுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது.விளையாட்டின் மீது நம் இளைஞர்களுக்கு உருவாகி இருக்கும் ஆர்வத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையாக நாம் கொண்டாடி வருகிறோம். அனைவருக்கும் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள். நம் கலாசாரம், பண்பாடு, பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். இந்த நேரத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த 20ம் தேதி குஜராத்தின் சோம்நாத் கோவில் கட்டுமான பணிகளை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தேன். இந்த கோவிலில் இருந்து 3 - 4 கி.மீ., தெலைவில் பல்கா தீர்த்தம் உள்ளது. இங்கு தான் பகவான் கிருஷ்ணர் இந்த பூமியில் தன் கடைசி நாட்களை கழித்தார். ஜதுராணி தாஸ் என்ற அமெரிக்க பெண்ணை சமீபத்தில் சந்தித்தேன்.


புதிய பாதை

'இஸ்கான்' அமைப்புடன் தொடர்புள்ள அவர், பக்தி இலக்கியத்தில் நிபுணத்துவம் பெற்றவர். அவருடனான உரையாடலை உங்களுக்காக ஒலிபரப்புகிறேன். அதை நீங்கள் நிச்சயம் கேட்க வேண்டும்.நம் நாட்டின் கலாசாரம், ஆன்மிக தத்துவம் ஆகியவை மீது உலக மக்கள் அதிக மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளனர். அப்படி இருக்கையில் நாம் அதை போற்றிப் பாதுகாப்பதுடன் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டும்.

பொம்மை தயாரிப்பு தொழிலில் உலக அளவில் 6 - 7 லட்சம் கோடி ரூபாய் சந்தை உள்ளது. தற்போது அத்துறையில் நம் இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளனர். பொம்மை தயாரிப்பில் பல புதிய தொழில்நுட்பங்களை நம் இளைஞர்கள் புகுத்தி உள்ளனர். பல புதிய முயற்சிகளை சோதனை முறையில் செய்து பார்க்கின்றனர். 'ஸ்டார்ட் அப்' எனப்படும், புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் சிறிய தொழில்களில் நம் இளைஞர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

பல சிறிய நகரங்களிலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாக துவங்கியுள்ளன.தங்களுக்கு தெரியாத துறைகளிலும் புதிய இலக்குகள், புதிய பாதைகள், கனவுகளுடன் இளைஞர்கள் ஈடுபடத் துவங்கி உள்ளனர்.மத்திய பிரதேசத்தின் இந்துார் நகரம், 'துாய்மை இந்தியா' திட்டத்தின் வாயிலாக நீர் மிகை நகரமாக உருவெடுத்துள்ளது. அவர்களின் முயற்சிக்கு பாராட்டுகள். கொரோனா காலத்திலும் துாய்மை இந்தியா திட்டத்தை நாம் கைவிட்டுவிடக் கூடாது.

மொழி என்பது நம் அறிவையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்க கூடியது. சமஸ்கிருத மொழியை நாம் எப்போதும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.மனிதகுலத்துக்கு தேவையான தெய்வீக தத்துவத்தை சமஸ்கிருதம் உள்ளடக்கி உள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள், சமஸ்கிருதம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளன.

இதுவரை நாடு முழுதும் 62 கோடிக்கும் அதிகமான 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தப் பட்டு உள்ளது. ஆனாலும் நாம் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


முன்மாதிரியாக திகழும் காஞ்சிரங்கால் ஊராட்சி

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் அருகே உள்ள காஞ்சிரங்கால் ஊராட்சி ஒன்றியத்தில், காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த மின்சாரத்தை ஊராட்சிக்கு சொந்தமான 'பேட்டரி' வாகனங்களை, 'ரீசார்ஜ்' செய்ய பயன்படுத்துவதுடன், தெரு விளக்கு, அரசு கட்டடங்களின் மின்சார தேவைக்கும் பயன்படுத்தி, மின் கட்டணத்தை சேமிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டியின் முயற்சியால், காஞ்சிரங்கால் ஊராட்சியில் 66 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதன் வாயிலாக நாள் ஒன்றுக்கு இரண்டு டன் உணவுப்பொருள் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.

இதற்காக காஞ்சிரங்கால் ஊராட்சி, சிவகங்கை நகராட்சி பகுதிகளில் இருந்து தினமும் காய்கறி, கோழி, மீன் போன்ற உணவுப்பொருள் கழிவுகள் சேகரிக்கப் படுகின்றன. பின் அவற்றை அரைத்து, நீரில் கலந்து அங்குள்ள கிடங்கில் ஊற்றுகின்றனர். அவை மக்கி மீத்தேன் வாயுவாக மாறுகின்றன. பின், 'ஜெனரேட்டரை' இயக்கி 220 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கின்றனர். இதனால் ஊராட்சி நிர்வாகத்திற்கு மின் கட்டணம் குறைகிறது.

''கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரித்து, தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்வதன் வாயிலாக, சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் கிராம மக்கள், நாட்டுக்கே முன் உதாரணமாக திகழ்கின்றனர்,'' என, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பாராட்டு தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஆக-202117:41:40 IST Report Abuse
Mohan தமிழ் வித்தவர் நகரில் இருந்துகொண்டு தமிழை இப்படி கொல்றீங்களே, ரிஷிகேஷ்.
Rate this:
jagan - Chennai,இலங்கை
30-ஆக-202119:11:08 IST Report Abuse
jaganகரெக்ட் தமிழ் தரத்தை தாழ்த்தி "வித்தவர்" . மேலும் டுமீல் , வாழைமட்டை என்று பட்ட பெயர் பெரும் அளவுக்கு தரத்தை தாழ்த்தியவர்....
Rate this:
Cancel
ரிஷிகேஷ் நம்பீசன் - கலைஞர் நகர் ,இந்தியா
30-ஆக-202111:35:24 IST Report Abuse
ரிஷிகேஷ் நம்பீசன் படித்தவர்கள் பகோடா விள்ளுங்கள் என்று சொல்லி விட்டு என்னை விலை GAS விலை ஏற்றிய மகான் இவர்
Rate this:
Cancel
30-ஆக-202110:27:09 IST Report Abuse
தமிழ்கிறுக்கன் நான் பார்த்த வரை, கடந்த மூன்று வருடங்களில் ஐடி கம்பனிகளில் ஸ்டார்ட்-அப் அதிகம் வரத்தொடங்கியுள்ளது. manufacturing துறையில் உலகம் சீனாவை நம்புவது போல், மென்பொருள் துறையில் சீனாவை விட இந்தியாவை அமேரிக்காவும் ஐரோப்பாவும் அதிகம் நம்புகின்றன. காரணம் செக்யுரிட்டி. Startup பெருக மத்திய அரசியின் திட்டங்கள் பெரிதும் உதவுவதையும், Make in India திட்டம் அருமையாக கை கொடுப்பதை மூத்த தொழிலதிபர்கள் மட்டுமின்றி இளைய தொழிலதிபர்களும் உணர்ந்தே உள்ளனர். எனவே முதலீடு செய்வதற்கு அதிக தயக்கம் காட்டுவதில்லை. இது IT இண்டஸ்ரியில் பெரும் டர்ன்ஓவரை அதிகரித்துள்ளது. கொரோனாவின் காரணமாக மட்டுப்பட்டாலும் starup களின் எண்ணிக்கை கூடியுள்ளதை பார்க்க முடிகிறது. Fresher கள் placement ஓரளவிற்கு அதிகரித்துள்ளது.
Rate this:
Valavan - Chennai,இந்தியா
30-ஆக-202119:15:40 IST Report Abuse
Valavanஸ்டார்ட்-அப் பெறுக மற்றுமொரு கரணம் அதிக வேலை இழப்பு இந்தியாவில். வேலை இழப்பவர்கள் புதிய கம்பெனி தொடங்குகிறாரகள். Make in இந்தியா திட்டத்தால் அல்ல....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X