ஹரியானாவில் போலீஸ் தடியடி: கண்டித்து விவசாயிகள் போராட்டம்

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சண்டிகர்:ஹரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மகா பஞ்சாயத்து கூட்டத்தை விவசாயிகள் நடத்தினர். ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.கர்னல்
 ஹரியானாவில் போலீஸ் தடியடி: கண்டித்து விவசாயிகள் போராட்டம்

சண்டிகர்:ஹரியானாவில் விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, மகா பஞ்சாயத்து கூட்டத்தை விவசாயிகள் நடத்தினர்.

ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தின் பல பகுதிகளில் நேற்று முன்தினம் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.கர்னல் மாவட்டத்தில் பா.ஜ., கூட்டத்துக்கு செல்லும் வழியில், மாநில பா.ஜ., தலைவர் ஓம் பிரகாஷ் தன்கரின் காரை வழிமறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். போலீசார் நடத்திய தடியடியில் 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதை கண்டித்து ஹரியானாவின் நுா மாவட்டத்தில் விவசாயிகளின் மகா பஞ்சாயத்து கூட்டம் நடந்தது. அதில் விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர். ஜலந்தர் - டில்லி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து முடங்கியது.

போலீசாரின் தடியடி குறித்து, முதல்வர் மனோகர்லால் கட்டார் கூறியதாவது:அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் அதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. எனினும், போலீசார் மீது கற்களை வீசி, நெடுஞ்சாலைகளை முடக்கினால் போலீசார் தக்க நடவடிக்கையை எடுப்பர். இவ்வாறு அவர் கூறினார்.


சர்ச்சையில் அதிகாரி

விவசாயிகள் மீது தடியடி நடத்துவதற்கு முன், போலீசாரிடம் உதவி கலெக்டர் ஆயுஷ் சின்ஹா கூறியது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தடியடி நடத்தி, விவசாயிகளின் தலையை உடைக்கும்படி போலீசாருக்கு அவர் உத்தரவிடும் காட்சிகள் அடங்கிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த அதிகாரிக்கு மேகாலயா கவர்னர் சத்யபால் மாலிக் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohan - Thanjavur ,இந்தியா
30-ஆக-202119:11:34 IST Report Abuse
Mohan அங்கே குந்தி இருக்கிற விவசாயிகளின் விளை நிலத்தின் பட்டா சிட்டாக்களை சோதித்து போலிகளை பொலி போடுங்க ஆபீசர்ஸ்.
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
30-ஆக-202115:51:22 IST Report Abuse
sankar தவறே இல்லை
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
30-ஆக-202109:47:31 IST Report Abuse
sankaseshan Well done Hariyana government. Commission mandiwallas will disturb the train . How the government will keep quiet ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X