வெளி சந்தை விற்பனையில் கோவாக்சின் தடுப்பூசி| Dinamalar

வெளி சந்தை விற்பனையில் 'கோவாக்சின்' தடுப்பூசி

Updated : ஆக 31, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
அங்க்லேஷ்வர்:வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கான 'கோவாக்சின்' தடுப்பூசி, முதல்முறையாக குஜராத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. நம் நாட்டில் தற்போது கொரோனாவுக்கு எதிரான 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.தடுப்பூசி
வெளி சந்தை விற்பனையில்  'கோவாக்சின்' தடுப்பூசி

அங்க்லேஷ்வர்:வெளி சந்தையில் விற்பனை செய்வதற்கான 'கோவாக்சின்' தடுப்பூசி, முதல்முறையாக குஜராத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது.

நம் நாட்டில் தற்போது கொரோனாவுக்கு எதிரான 'கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின்' தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவாக்சின் தடுப்பூசியை தெலுங்கானாவின் ஐதராபாதைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வருகிறது.தடுப்பூசி நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு வினியோகித்து வருகிறது. இந்த தடுப்பூசிகள் வெளி சந்தையில் விற்பனைக்கு வரவில்லை.

இந்நிலையில், குஜராத்தின் பரூச் மாவட்டத்தில் அங்க்லேஷ்வர் என்ற இடத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தொழிற்சாலை உள்ளது. இங்கு கோவாக்சின் தயாரிக்க மத்திய அரசிடம் அந்நிறுவனம் அனுமதி கோரியது. இதற்கு சமீபத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அங்க்லேஷ்வர் தொழிற்சாலையில் தடுப்பூசி தயாரிக்கும் பணிகள் துவங்கின. இங்கு கூடுதலாக 20 கோடி, 'டோஸ்' தடுப்பூசி தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இங்கு தயாரிக்கப் பட்ட கோவாக்சின் தடுப்பூசி வெளி சந்தை விற்பனைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதை அனுப்பி வைத்தார். ''வெளி சந்தையிலும் தடுப்பூசி கிடைப்பதால் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி எளிதில் சென்றடையும்,'' என, அமைச்சர் மாண்டவியா தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X