காபூல் தாக்குதலில் பலியான அமெரிக்க வீரர்கள் உடலுக்கு பைடன் அஞ்சலி

Updated : ஆக 29, 2021 | Added : ஆக 29, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டென்வர்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்த 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலுள்ள டோவர் விமானப்படைத் தளத்துக்குச் சென்ற அவர், தனது மனைவி ஜில் பைடன் இணைந்து மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.வரும் ஆகஸ்ட்

டென்வர்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடைபெற்ற மனித வெடிகுண்டுத் தாக்குதலில் மரணமடைந்த 13 ராணுவ வீரர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அமெரிக்காவின் டென்வர் மாகாணத்திலுள்ள டோவர் விமானப்படைத் தளத்துக்குச் சென்ற அவர், தனது மனைவி ஜில் பைடன் இணைந்து மரணமடைந்த வீரர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.



latest tamil news




வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் அமெரிக்க மீட்பு விமானங்கள் காபுல் நகரில் இருந்து முழுவதுமாக வெளியேற உள்ளன. இந்நிலையில் அமெரிக்க விமான தளத்தில் மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது யார் என்று அமெரிக்க புலன்விசாரணை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு தாலிபான்கள் திட்டமிட்டதா அல்லது ஹக்கினி பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டதா என்று விசாரணை மேற்கொள்கின்றனர். இந்த தற்கொலை தாக்குதலுக்கு காரணமான அமைப்பு தண்டிக்கப்படும் என்று ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார்.


latest tamil news



அமெரிக்க வீரர்களின் மரணத்தை அடுத்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். வீரர்களின் உயிர் தியாகத்துக்கு பயங்கரவாதிகள் பதில் சொல்லியாகவேண்டும் என்று ஜோ பைடன் உறுதிபட தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
30-ஆக-202110:43:48 IST Report Abuse
Nellai tamilan கடைசியில் இதுதான் மிச்சம். தகுதியில்லாத தலைவனை உடைய பிரஜைகள் தானாக அழிவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X